Monetize Your Website or Blog

Saturday, 14 May 2016

மாந்தோப்பில் வீசப்பட்ட 20 லட்சம்..! இது சேலம் பரபரப்பு





சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினரைப் பார்த்ததும் 20 லட்ச ரூபாயை மாந்தோப்பில் வீசி விட்டு சென்ற 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்கவும், பண நடமாட்டத்தை கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டம், பாலக்கோட்டில் இருந்து பெல்ரம்பட்டிக்கு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பணம் எடுத்து வருவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் இரு குழுக்களாக அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்தனர். தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அங்குள்ள மாந்தோப்பு அருகே வாகனத்தை நிறுத்தினர். அப்போது வண்டியில் பின்னால் அமர்ந்து இருந்தவர் 2 பைகளுடன் கீழே இறங்கி அங்குள்ள மாந்தோப்புக்குள் சென்றார். அங்கு அந்த பைகளை வீசி விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த தேர்தல் அதிகாரிகள் மாந்தோப்புக்கு விரைந்து சென்று அந்த மர்ம நபர்கள் வீசிச் சென்ற பைகளை எடுத்து சோதனை நடத்தினர்.

அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பாலக்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளியிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அப்போது, பையில் 20 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 20 லட்சத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். பணத்தை மாந்தோப்பில் வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றவர்கள் குறித்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment