இந்த தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி 130 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா கூறினார்.
தமிழகம் முழுவதும் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மணிகண்டனை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் செய்தபோது, ''ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் ஏராளமான திட்டங்களை அறிவித்து எதுவும் செய்யாமல் மக்களுக்கு 111 என்ற பட்டை நாமத்தை போட்டுள்ளார். மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை தரமற்றதாக வழங்கினார். அவை அனைத்தும் தற்போது பழைய இரும்பு கடையில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி இந்த தேர்தலோடு முடிந்தது. அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. என்ற நிலை மாறிவிட்டது.

இந்த தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கறைபடிந்த கட்சிகள். ஆனால் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் உள்ள எந்த தலைவர்கள் மீதாவது ஊழல் வழக்குகள் உள்ளதா? அல்லது வேறு ஏதாவது கிரிமினல் வழக்குகள் உள்ளதா? எந்த குற்றச்சாட்டும் இல்லாத தலைவர்கள் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் உள்ளவர்கள். கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் தமிழக மக்களுக்கு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், நல் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றும் ஒன்றிணைந்து உள்ளார்கள்.
இந்த தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க.கூட்டணி வைத்து கொள்ளப்போகிறது. ரூ.500 கோடி பெற்று விட்டார்கள் என தினமும் வதந்திகள் வந்தன. ஆனால் தமிழக மக்களின் நலன்கருதி மக்களுடன் தான் கூட்டணி என அறிவித்து விஜயகாந்த் நல்ல முடிவு எடுத்து உள்ளார். நூறும், பீரும், சோறும் மக்கள் வாழ்க்கை தரத்தை என்றும் உயர்த்தாது. எனவே நூறுக்கும், பீருக்கும், சோறுக்கும் ஆசைப்பட்டு உங்கள் வாக்குகளை விற்று விடாதீர்கள்.
விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் என்று எண்ணி நீங்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் வாக்குகளை வெறும் ரூ.500-க்கு விற்று விடாதீர்கள். பணத்துக்காக உங்கள் வாக்குகளை விற்றால், அதனை அவர்கள் ஆட்சி செய்யும் 5 ஆண்டுகளில் திரும்ப எடுத்து கொள்வார்கள். கருத்து கணிப்புகள் அனைத்தும் கருத்து திணிப்புகளாக உள்ளன. 100 பேரிடம் கருத்து கேட்டு அதனை அனைவரின் கருத்துகள் என வெளியிடுகிறார்கள். மக்கள் தெளிவாக உள்ளார்கள். கருத்து கணிப்புகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி 130 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தி.மு.க., அ.தி.மு.க.வை தமிழ்நாட்டை விட்டு அகற்ற வேண்டும். 2 கட்சிகளும் விஷ செடிகள். அதனை அகற்ற வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க.வினர் ஆட்சியின்போது கொள்ளை அடித்த பணத்தை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு வழங்க உள்ளனர். தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றியது தான் தி.மு.க., அ.தி.மு.க.வின் சாதனை. லஞ்சம், ஊழலற்ற ஆட்சி அமைக்க தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். டெல்லியில் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததை போல் தமிழகத்திலும் அரசியல் மாற்றம் நிகழும்" என்றார்.

No comments:
Post a Comment