தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பது என் பழக்கம்.சினிமாவில் மட்டுமல்ல, நேரிலும்.' என்று ட்விட்டர் வலைத்தளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.


பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் விஜயகாந்த் தனது ஃபாலோயர்ஸூடன் உரையாடினார்.தமிழகம் முழுக்க தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல கட்டமாக வாக்குச் சேகரித்து வரும் விஜயகாந்த், முதல்முறையாக ட்விட்டரில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களில் விஜயகாந்த் மட்டுமே ட்விட்டர் பிரசாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்ததக்கது. இதற்கென #TweettoVijayakant என்ற ஹாஷ் டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் ட்விட்டர் மூலம் விஜயகாந்துடன் கலந்துரையாடினார். அவரிடம்,தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் என்ன என்ன செய்வீர்கள் என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர் உடனுக்குடன் பதில் அளித்தார்.

No comments:
Post a Comment