தமிழக சட்டப்பேரவைக்கு, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர்த்து 232 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 134 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தி.மு.க. தனது கூட்டணியுடன் 98 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவீதம் வெளியாகி உள்ளது. அதன்படி விபரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
| அ.தி.மு.க. 40.8 | 40.8 | 1,76,17,060 |
| தி.மு.க. | 31.6 | 1,36,70,511 |
| காங்கிரஸ் | 6.4 | 27,74,075 |
| பா.ம.க. | 5.3 | 23,00,775 |
| பா.ஜ.க | 2.8 | 12,28,629 |
| தே.மு.தி.க. | 2.4 | 10,34,384 |
| நாம் தமிழர் கட்சி | 1.1 | 4,58,104 |
| ம.தி.மு.க. | 0.9 | 3,73,713 |
| இந்திய கம்யூனிஸ்டு | 0.8 | 3,40,290 |
| விடுதலை சிறுத்தைகள் | 0.8 | 3,31,849 |
| இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | 0.7 | 3,13,808 |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு | 0.7 | 3,07,303 |
| த.மா.கா. | 0.5 | 2,30,711 |
| புதிய தமிழகம் | 0.5 | 2,19,830 |
| மனிதெநேய மக்கள் கட்சி | 0.5 | 1,97,150 |
| கே.எம்.டி.கே. | 0.4 | 1,67,560 |
| பகுஜன் சமாஜ் | 0.2 | 97,823 |
| எஸ்.டி.பி.ஐ. | 0.2 | 65,978 |
| சுயேச்சைகள் | 1.4 | 6,17,907 |
| நோட்டா | 1.3 | 5,61,244 |
இந்த தேர்தலில் நோட்டா 1.3 (5,61,2440 சதவீதம் வாக்குகளை பெற்று 7வது இடத்தை பிடித்து, நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, த.மா.கா., புதிய தமிழகம், மனிதெநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளி உள்ளது.

No comments:
Post a Comment