Monetize Your Website or Blog

Wednesday, 11 May 2016

‘மாடி வீடு கட்ட வைத்த மலர் சாகுபடி!

இரண்டு பக்கமும் பசுமையான வயல்கள்புத்தம் புதிதாக பூத்துக் குலுங்கும் மலர்களில் இருந்துபுறப்பட்டு வரும் வாசம் காற்றோடு சேர்ந்து நம்மைத் தழுவிக் கொள்கிறதுஅதை உள்ளிழுத்துக்கொண்டே குண்டும் குழியுமான சாலையைக் கடந்து அந்த கிராமத்துக்குள் நுழைந்தோம்அது...திண்டிவனத்தை அடுத்திருக்கும் முட்டியூர் கிராமம்.

வயல்வெளிகளுக்கு நடுவே ஆங்காங்கே முளைத்து நிற்கும் மரங்களைப் போல தள்ளித்தள்ளி வீடுகள்.வயதானவர்கள்கைக்குழந்தையோடு இருந்த பெண்களைத் தவிர ஊருக்குள் வேறு யாருமில்லைநாம்தயங்கி நிற்க... அதைத் தெரிந்து கொண்டவர் போல், '‘வேலை இருந்தாலும் சரிஇல்லனாலும் சரி,ஆம்பளைபொம்பளை அத்தனை பேரும் வயல்லதான் இருப்பாங்க'’ என்றார் அந்த வழியாக மோட்டார்வண்டியில் (டி.வி.எஸ்-50) வந்த இளைஞர்.

‘'எங்க ஊர்ல பெரும்பாலும் பூ சாகுபடிதான்அதுலயே பணக்காரங்களா ஆனவங்க பலர் இருக்காங்க.வயல் பக்கம் போயி பாருங்க'’ என்று கூடுதல் தகவலையும் தந்துவிட்டு கடந்து போனார் அந்தஇளைஞர்வயக்காட்டுப் பக்கம் போனபோது எதிர்ப்பட்டார் வீராசாமி என்ற விவசாயி. ‘'அதென்ன ஊர்லபெரும்பாலானவங்க பூ சாகுபடியில இருக்கீங்க?'’ என்று கேட்டோம்.

‘‘இந்தச் சாகுபடி மட்டும் செய்யாமப் போயிருந்தா... பல பேரு பஞ்சம் பொழைக்க ஊரை விட்டேகிளம்பியிருப்போம்'' என்று சற்றே உணர்ச்சி வசப்பட்டவராக ஆரம்பித்தவர்,

‘‘ஆறு வருஷத்துக்கு முன்ன எல்லாரையும் போல நெல்லும் மல்லாட்டையும்தான் (நிலக்கடலை)போட்டுக்கிட்டுருந்தேன்வருமானம் சொல்லிக் கொள்ளும்படி இல்லவயல்ல போடுற செலவும்வெளைஞ்சு வர்ற வெள்ளாமையும் சரியா இருந்துச்சிசுத்துப்பட்டு கிராமத்துல சிலர் கனகாம்பரம் பயிர்செஞ்சிக்கிட்டு இருந்ததைப் பார்த்துட்டுநானும் அதுல இறங்கினேன்உண்மையிலயே நல்ல லாபம்கிடைச்சுதுஅதிலிருந்து ஆறு வருஷமா தொடர்ந்து பூ சாகுபடிதான்அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபினா அது கனகாம்பரம்தான்'' என்று நெகிழ்ந்துபோய் சொன்னவர்சாகுபடி தொழில் நுட்பங்களுக்குள்புகுந்தார்.
''நல்ல வடிகால் வசதியுள்ள நிலமாயிருந்தா பூச்செடி நல்லா வளரும்இந்தப் பகுதியில தனி நபருங்கஇந்த விதைச் செடிகளை உற்பத்தி செஞ்சி விக்கறாங்கஅதை வாங்கிபார் போட்டு நடவு செய்யணும்.நட்ட மூணாவது மாசம் பூக்கத் தொடங்கும்நடவுக்கு முன்னாடி ஒரு வண்டி தொழு உரம்ஒரு மூட்டைடி..பிபோடணும்நான் 40 சென்ட் நிலத்துல இந்தச் சாகுபடியைச் செய்றேன்இந்த நிலத்துல 4 ஆயிரம்செடி வரைக்கும் நடலாம்வாரம் ஒரு முறை பாசனம் செஞ்சா போதும்கோடையாயிருந்தா... 2நாளைக்கு ஒரு முறை பாசனம் செய்யணும்கனகாம்பரத்துல உள்ள ஒரு சௌகரியம் பூச்சி மருந்துஅதிகமா அடிக்கத் தேவையில்லஒரு முறை நடவு செஞ்சுட்டா... மூணு வருஷத்துக்கு தொடர்ந்து பூபறிக்கலாம்.

கனகாம்பர சாகுபடியைப் பொறுத்தவரை ஆள் பலம் அதிகமா வேணும்காலையில 5 மணிக்கெல்லாம்பூ பறிக்க போயிடணும்டார்ச் லைட்டை குச்சியில கட்டிவிட்டுட்டுத்தான் பூ பறிப்போம்காலையில 8மணிக்கு முன்னாடி மார்க்கெட்டுக்கு கொண்டு போனாதான் நல்ல விலை கிடைக்கும்.

செடி வெச்சு மூணு மாசம் கழிச்சு தினமும் அரை கிலோ பூ கிடைக்கும்நாளாக நாளாக 25 கிலோவரைக்கும் கிடைக்கும்ஒரு கிலோ 75 ரூபாயி லிருந்து 100 ரூபாய் வரைக்கும் விலை போகும்ஏத்தஇறக்கத்தோட வித்தாலும் மாசம் 7 ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்துடலாம்இந்தச் சாகுபடியிலமுக்கியமான விஷயம்நேரம் தவறாம இருக்கறதுதான்என்ன வேலை எப்படி இருந்தாலும்அதைஅப்படியே போட்டுட்டு பூ பறிச்சிட்டுத்தான் மத்த வேலையைப் பார்க்கணும்இல்லனா... பூ வாடிப்போய்,நஷ்டத்துல தள்ளிடும்மழைதான் கனகாம்பரத்துக்கு எதிரிபூவெல்லாம் அழுகி கொட்டிடும்ஆனா,மழை குறைஞ்சுட்டா மறுபடியும் பூத்துடும்'' என்று சொன்ன வீராசாமி,

''ரொம்ப கவனமாப் பார்த்துப் பார்த்து செய்றதால கையில கொஞ்சம் கொஞ்சமா பணம்சேர்ந்துகிட்டிருக்குகூடிய சீக்கிரமே மாடி வீடு கட்டிடுவேன்'’ என்று கண்களில் நம்பிக்கைப் பொங்கச்சொன்னார்அடுத்துசம்பங்கி பூ சாகுபடி செய்யும் விவசாயி செந்தாமரையைச் சந்தித்தோம்.வீராசாமியோ மாடி வீடு கட்ட காசு சேர்த்துக் கொண்டிருக்கிறார்செந்தாமரை கட்டி முடித்துவிட்டவர்.
‘‘சம்பங்கி சாகுபடியில சம்பாதிச் சிதான் இந்த வீட்டையே கட்டினோம்'' என்று அதைப் பற்றிபெருமிதத்தோடு சொன்னவர்சாகுபடி விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

''சம்பங்கி பயிர் செய்ய வைகாசி பட்டம்தான் ஏத்ததுநாலு மூலையும் நெலத்தை நல்லா ஓட்டிப்போடணும்நோய் படாத நல்ல கிழங்கா பார்த்து வாங்கி வந்து பார் போட்டு நடணும்எனக்கு 30 சென்ட்நிலமிருக்குஎங்க அப்பா காலத்துல இருந்தே சம்பங்கிதான் பயிர் செய்றோம்பனியும் மழையும்தான்சம்பங்கிக்கு எதிரிஅந்தச் சமயத்துல விளைச்சல் குறைவா இருக்கும்வெயில் காலம்தான்சம்பங்கிக்கு ரொம்பப் பிடிக்கும்எந்த அளவுக்கு வெயில் அதிகமா அடிக்குதோ... அந்த அளவுக்குவிளைச்சல் இருக்கும்நடவு செஞ்சு மூணு மாசம் கழிச்சு பூக்கத் தொடங்கும்அப்போதைக்கு பூகொஞ்சமாதான் கிடைக்கும்ஆறு மாசத்துக்குப் பிறகுதான் அதிகரிக்கத் தொடங்கும்சராசரியா மாசம் 3ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்ரெண்டாவது வருஷத்துல கொண்டாட்டம்தான். 30 சென்ட்நிலத்துல தினமும் 60 கிலோ பூ பறிக்கலாம்மாசம் 10 ஆயிரம் ரூபாய் கூட வருமானம் கிடைக்கும்.ஒரு முறை கிழங்கு போட்டா மூணு வருஷத்துக்கு தொடர்ந்து மகசூல்தான்வருஷம் முழுக்கபூத்துக்கிட்டே இருக்கும்மூணு வருஷம் முடிஞ்சதும் பழைய கிழங்கை எடுத்துட்டுபுதுசா நடணும்.

நெலத்தைக் காய விடாம தண்ணி காட்டணும்மாசம் ஒரு தடவை களை எடுத்த கையோட ஒருமூட்டை டி..பிஉரம் போடறேன்கொத்துக் கொத்தா பூக்குதுஉரத்துக்குதான் செலவு மத்தபடி பூச்சிமருந்து அடிக்கிற செலவே கிடையாதுனு சொல்லலாம்மூணாவது வருஷம் விளைச்சல் படிப்படியாகுறையும்பெரும்பாலும் இரண்டரை வருஷத்துலேயே செடியைப் பிடுங்கிட்டு புதுகிழங்கு நடுறதுதான்இந்தப் பகுதியில வழக்கமா இருக்கு.
ஒரு நாள் பூ பறிக்க ஆள் வரலனாலும் கவலைப்படத் தேவையில்லைமறுநாள் பறிச்சிக்கலாம்.இப்போகிலோ 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரைப் போகுதுமார்க்கெட்ல பூவோட விலைகுறைச்சலா இருக்கறப்ப... 'சென்ட்’ தயாரிக்கற தொழிற்சாலைக்குக் கொடுக்கலாம்கிலோ ஏழுரூபாய்னு வியாபாரிங்க வந்து வாங்கிகிட்டுப் போயிடுவாங்கபூ வாடி இருந்தா கூட... சென்ட்தயாரிக்கறவங்க எடுத்துப்பாங்கநஷ்டமா போறதுக்கு இந்த விலையாவது கெடைக்குறது
ரொம்ப ஆறுதலான விஷயம்’’ என்ற செந்தாமரைவரவு-செலவுக் கணக்கைச் சுருக்கமாக சொன்னார்.
‘‘மூணு வருஷத்துல முப்பது சென்ட்ல மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வருமானம்கிடைக்கும்இதில் அதிக பட்சமா 20 ஆயிரம் ரூபாய் செலவு போனாலும்ஒரு லட்சத்து 50 ஆயிரம்ரூபாய் கிடைக்கும்தோட்டம் முழுக்க போடாட்டியும்ஒரு ஓரமா சம்பங்கி போட்டாலும் குடும்பத்துசெலவுகல்யாணம் காட்சிக்குனு மத்தவங்ககிட்டப் போய் நிக்க வேண்டியதில்ல’’ என்று அடித்துசொன்னார்செந்தாமரையை 94429-10882 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுமேற்கொண்டு விவரங்களைப் பெறலாம்.  சம்பங்கி மலருக்கு மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் திருச்சி மாவட்டம்துறையூருக்கு அருகே உள்ள வெங்கடாசலபுரத் துக்குப் பயணமானோம்காலை 4 மணிக்கு எழுந்து பூ பறித்து, 8 மணிக்கெல்லாம் கையில் காசு பார்த்து விடும் விவசாயி தனகோபாலன்அவரிடம் பேசியபோது, '‘பல வருஷமா சம்பங்கி சாகுபடிதான். 98-ம் வருஷம் இதுல புதுரகம் ஏதாவது இருக்கானு தேட ஆரம்பிச்சேன்அப்பதான் பெங்களூர்காசர்கட்டாவுல இருக்கற இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம் சம்பங்கியில புது ரகம் வெளியிட்டு இருக்கிற தகவல் கிடைச்சுதுஅங்க இருக்கற ராமச்சந்திரன்ங்கிற விஞ்ஞானிகிட்ட பேச வாய்ப்பு கிடைச்சுதுஎன்னோட நல்ல நேரம் அவருக்கு தமிழ் தெரிஞ்சிருந்துதுஅவர்கிட்ட பேசிவீரிய ரகமான ‘ப்ரஜ்வல் (Prajwal)சம்பங்கி கிழங்கை வாங்கினேன்இப்ப 2 ஏக்கர் வரைக்கும் பயிரிட்டிருக்கேன்.

நல்ல வடிகால் வசதி உள்ள நிலம் இதுக்கு அவசியம்மத்த ரகத்தைக் காட்டிலும் இது நிறையபூக்கும்எப்ப வேணும்னாலும் நடவு செய்யலாம்பார் போட்டுத்தான் நடவு செய்றேன்இப்போ ரசாயன உரம் போடறதை குறைச்சிக்கிட்டு இருக்கேன்சீக்கிரமே முழுக்க இயற்கை உரத்துக்கு மாறிடுவேன்சம்பங்கியில பிரச்சனை நூற்புழுதான்இத கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 கிலோ உயிர் பூஞ்சாணமான விரிடியை எருவில் கலந்து போடவேண்டும்.
சாதாரண ரகம் பயிரிட்டா ஏக்கருக்கு தினமும் 50 கிலோ கிடைக்கும்னா... 'ப்ரஜவல்ரகத்துல 150 கிலோ கூட கிடைக்கும்ஆக மூணு மடங்கு விளைச்சல் அதிகமா கிடைக்குதுவிக்கறதுலயும் பிரச்னை கிடையாதுதுறையூர் மார்க்கெட்டுலயே வித்துடறேன்பத்து ஏக்கர் நிலத்தை வெச்சிக்கிட்டு என்னென்னவோ பயிர் செய்றவங்களே லாபம் எடுக்க முடியாம தவிக்கறாங்கஆனாரெண்டு ஏக்கர் நெலத்துல சம்பங்கி போட்டதும் என்னோட பிரச்னை எல்லாம் தீர்ந்து போயிடுச்சிஏதாவது பிரச்னையோட சம்பங்கி தோட்டத்துக்குள்ள போனா கொஞ்ச நேரத்துல மனசு லேசாயிடுதுஅது கொடுக்கிற வாசமும்வருமானமும் உடம்புக்கு புது தெம்புதான்’’ என்று சொல்லி முடித்தபோது தனகோபாலனின் முகத்தில் அப்படியரு திருப்தி. (இவரை, 98423- 28752 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்).
பூமியின் புன்னகை மலர்கள் என்பார்கள்இங்கே மலர் சாகுபடி செய்து வெற்றிப் புன்னகை புரிகிறார்கள் இந்த விவசாயிகள்! 

'ப்ரஜ்வல்சம்பங்கி பற்றிகாசர்கட்டாவிலிருக்கும் இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானியான டாக்டர்ராமச்சந்திரன்அலங்கார பயிர்கள் துறை தலைவர் மீனாட்சி சீனிவாஸ் ஆகியோர் நம்மிடம் கூறும் போது, ‘‘நாட்டு ரகத்தை காட்டிலும் பெரிய பூக்களாக இருப்பதால் மலர்க் கொத்துக்களில் பயன்படுத்தவும்சென்ட் எடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறதுஆரம்பத்தில் டெல்லிபஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்துதான் விவசாயிகள் விதை கிழங்கு வாங்கிச் சென்றனர்இப்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகிறார்கள்எங்களுடைய ஆராய்ச்சி நிலையத்தில் தற்சமயம் விவசாயிகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு விதை கிழங்கு இருப்பு இல்லைமற்றபடி சாகுபடி குறித்த தகவல்களைச் சொல்வதற்கு தயாராகவே இருக்கிறோம்’’ என்றனர்தொடர்புக்கு: 080-28466420


No comments:

Post a Comment