Monetize Your Website or Blog

Wednesday, 11 May 2016

உள்ளம் பதறுதே அய்யோ....களத்தில் இறங்கிய கேரளா!


 இந்தியாவின் தண்ணீர் வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து,  குளிர்பானமாக தயாரித்து விற்பனை செய்து, பொதுமக்களின் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியுள்ள 'பெப்சி' நிறுவனத்திற்கு எதிராக, கேரளாவில் உள்ள கிராமம் ஒன்றின் பஞ்சாயத்து, நிலத்தடி நீரெடுப்பதை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
 
கேரளா மாநிலம் புத்துஸ்சேரி கிராமப்  பஞ்சாயத்து பகுதியில்,  தற்போது குடிநீர் பற்றாக்குறையும் வறட்சியும் மக்களை வாட்டிவருகிறது. இந்த நிலையைத் தாங்கமுடியாமல் அக்கிராமத்தின் மக்கள் தவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து கிராமப்  பஞ்சாயத்து நிர்வாக கமிட்டி, அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.


கோழிக்கோடு அருகே உள்ள தொழில்துறை பகுதியில், பெப்சிகோ நிறுவனத்தின்  தொழிற்சாலை உள்ளது. இந்நிறுவனத்தால் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டு தண்ணீர்ப் பஞ்சம் வந்துள்ளது.இதனையடுத்து  புத்துஸ்சேரி கிராமப்  பஞ்சாயத்து நிர்வாக கமிட்டி தீர்மானத்தில்," பெப்சிகோ நிறுவனம் இப்பகுதியில் தன்னுடைய தொழிற்சாலை செயல்பாட்டை மூன்று மாதங்களுக்கு நிறுத்தவேண்டும், இப்போது நிலவும் சூழ்நிலையில் அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளது.
 
தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது பஞ்சாயத்து கமிட்டியின் மொத்தம் 23 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். விரைவில் இதுதொடர்பான நோட்டீஸ், பெப்சிகோ நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று பஞ்சாயத்துத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதற்கு முன்பாக, ஏற்கெனவே நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடாது என்று அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு அந்நிறுவனம்  இதுவரையில் பதில் அளிக்கவில்லை என்றும் தெரிகிறது. நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் எடுக்கவேண்டும் என்ற வரம்பையும் மீறி பெப்சிகோ நிறுவனம் அதிகமான நிலத்தடி நீரை எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment