பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, ஜூன் மாதம் நடைபெறவுள்ள தேர்வில் வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து பரபரப்பை கூட்டவுள்ள நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, வெளிவந்து 'ஒருநாள்' பரபரப்பை கூட்டியுள்ளது +2 தேர்வு முடிவுகள்.
எப்படி, அன்னையர் தினத்தன்று மட்டும், அன்னையைப் போற்றி புகழ்ந்து, முகநூலில் புகைப்படங்களும், மீம்களும் குவிகின்றனவோ, மகளிர் தினத்தன்று மட்டும், ஆண்கள் பெண்ணியவாதிகளாக மாறுகிறார்களோ, அப்படித்தான், ஆண்டுதோறும் இந்த ஒருநாள் மட்டும் அதிக மதிப்பெண் பெரும் மாணவர்கள் கொண்டாடப்படுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன் 1180 என்றிருந்த மாநில முதல் மதிப்பெண், இப்போது 1195 ஐ தொட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1200 மதிப்பெண்களையும் மாணவர்கள் அள்ளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சில ஆண்டுகள் முன்புவரை முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட்டு மட்டுமே வந்தனர். ஆனால், தற்போது முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் கொண்டாடப்படுவதுடன், விமர்சிக்கவும், கலாய்க்கவும் செய்யப்படுகின்றனர், முகநூலில், வாட்ஸ் ஆப் இவற்றில் இந்த மாணவர்களை நோக்கி, பதிவுகளும், மீம்களும் காலை முதலே உதிக்க ஆரம்பித்து விட்டன.
"முதல் மார்க் எடுத்தாலே டாக்டர் இல்ல என்ஜினியர்தானா…?" என்பது தான் அந்த பதிவுகள் மற்றும் மீம்களின் கரு. பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்ட நிலையில், மருத்துவத்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த படிப்புகளையே முதல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் தேர்வு செய்கிறார்களே என்ற ஆதங்கம்தான் இந்த பதிவுகளின் பின்னணி.

ஆனால், +1 இல் உயிரியல் பிரிவை தேர்ந்தெடுத்து, கடுமையாக உழைக்கும் மாணவி, அப்போதே, தான் ஒரு டாக்டர் என்பதை முடிவு செய்துவிடுகிறாள். அதேபோலத்தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவன், தான் ஒரு என்ஜினியர் என்பதை முடிவு செய்துவிடுகிறான். காமர்ஸ் பிரிவை தேர்ந்தெடுப்பவர்கள், சிஏ அல்லது சில சமயங்களில் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு வருகின்றனர்.
80 முதல் 90 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களில் பலர் தாங்கள் +1 சேரும்போதே இந்த முடிவை எடுத்து விடுகின்றனர். 60-70 சதவீத மதிப்பெண்கள் எடுக்கும் "ஏவரேஜ் ஸ்டூடண்ட்" என சொல்லப்படும் மாணவர்களும், அதற்கும் கீழான மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களும்தான், குழப்பமான மனநிலையில் தங்களில் பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளை கடந்து வருகின்றனர்.
அவர்கள்தான், தேர்வு முடிகளுக்குப் பின், ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் தள்ளப்படுகின்றனர். அவர்களில் பல மாணவர்கள், தங்களின் விருப்பத்திற்கு முரணான ஒரு பாடத்தை நான்கு ஆண்டுகள் பயில்கின்றனர். பின், வேறு துறையில் ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்தோ அல்லது வேலை கிடைக்காமலோ காலத்தை கடத்துகின்றனர். சிலர் இதிலிருந்து தப்பித்து, கலை மற்றும் அறிவியல் துறைகளை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக, பொறியியலை தேர்ந்தெடுப்பதே ஒரு குற்றம்போலவும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் ஏதோ போகிற போக்கில் தங்கள் லட்சியமாக மருத்துவத்தை, பொறியியலை சொல்லிவைப்பதாக சித்தரிப்பது தவறு. இது மருத்துவத்திற்கும் பொருந்தும். எந்த முதல் மதிப்பெண் மாணவ-மாணவியும், முதல் மதிப்பெண் எடுத்ததற்காக மருத்துவத்தையோ, பொறியியலையோ தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக அவர்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆவதற்காகத்தான் உழைத்து, முதல் மதிப்பெண்ணையே எடுக்கின்றனர்.
இவர்கள் மீது வைக்கப்படும் இன்னொரு விமர்சனம், இவர்கள் மனப்பாடம் செய்தே, மதிப்பெண் வாங்குகின்றனர் என்பது. ஏன், இந்த மாணவர்களில், ஒருவருக்கு அணு இயற்பியல் பாடத்தில் ஆர்வம் இருந்திருக்கலாம். அந்த பாடத்தில் மூலமாக, அணு உலைகளைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். நாளை அணு இயற்பியல் சார்ந்த, ஒரு பொறியியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, ஆராய்ச்சி மேற்கொண்டு ஒரு அணு விஞ்ஞானியாகி, மக்களுக்கு அணு உலைகளைப் பற்றிய விழிப்பு உணர்வைக் கூட அவர் ஏற்படுத்தலாம்.
மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்பதையும் விமர்சிப்பவர்கள் மறந்துவிடக் கூடாது. மேலும், தான் என்ன படிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை. அதேபோல், அறிவியலில் ஆர்வம் இல்லாத மாணவர்களை, தங்களின் சொந்த கவுரவத்திற்காக பொறியியலில் சேர்ப்பதையும் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் பொறியியலை தேர்ந்தெடுப்பதில் ஒரு தவறும் இல்லை.
மாணவர்களின் மீது பொறியியலை திணிப்பதுதான் தவறு.

No comments:
Post a Comment