
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் உள்ள தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிற்பகலில் 3 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவிற்கு, வழி நெடுகிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி காலத்தில் வசந்தம் வீசுவதாகவும், தமிழத்தில் வசந்தம் தொடர்ந்திட நூர்ஜகானுக்கு வாக்களியுங்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து எழும்பூர், துறைமுகம், ராயபுரம், பெரம்பூர் தொகுதிகளில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா, தொண்டர்கள் மத்தியில் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளதாக கூறிய ஜெயலலிதா, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ அதிமுகவிற்கு மீண்டும் வாக்களிக்குமாறும், ஏழைகள் ஏற்றம் பெற்றிட புரட்சித்தலைவர் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் பிரசாரம் செய்தார்.
ஒரே நாளில் 15 தொகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால், சில நிமிடங்கள் மட்டுமே வேனில் இருந்தவாறு பேசினார் ஜெயலலிதா.
"கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது" என்ற வார்த்தையை செல்லும் இடங்களில் எல்லாம் கூறினார் ஜெயலலிதா.
ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமாருக்காக பிரசாரம் செய்த ஜெயலலிதா, ஏழை எளியோர் ஏற்றம் பெற்றிட அதிமுகவிற்கு வாக்களியுங்கள் எனக் கூறினார்.

No comments:
Post a Comment