Monetize Your Website or Blog

Thursday, 4 August 2016

இனி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்!

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் புதிய சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களை குறைக்கவும், சாலை பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை, சாலை விதிகளை மீறுவோர் மீதான தண்டனை மற்றும் அபராதம் அதிகரிப்பு, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்பட்டன.


இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம், வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை அபராதம், லைசன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் அபாரதம் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், இந்த சட்ட திருத்தத்தில் வாகன விபத்திற்கான இழப்பீடு தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல், வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு தொகை உள்ளிட்ட பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




No comments:

Post a Comment