Monetize Your Website or Blog

Wednesday, 10 August 2016

தேனிலவுக்கு தனியே சென்ற கணவர்... வெளியுறவுத் துறையை உலுக்கிய ட்விட்!

டெல்லியை சேர்ந்தவர் ஃபைஷன் பட்டேல். இவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதையடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கு ஹனிமூன் செல்ல மனைவியுடன் திட்டமிட்டார். ஆகஸ்ட் 8 ம் தேதிக்கு ( நேற்று) டிக்கெட்டுகள் கூட புக் செய்தாகி விட்டது. பயணத்துக்கு தயாரான நிலையில், ஃபைஷான் பட்டேலின் மனைவி சானாவின் பாஸ்போர்ட் காணாமல் போய் விட்டது.


இந்த மாதிரியான சூழ்நிலையில், பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து விடுவார்கள். ஆனால் ஃபைஷான்  விமானத்தின் டிக்கெட்டை ரத்து செய்யவில்லை. அதே விமானத்தில்  ஃபைஷான் ஏறினார். தனது இருக்கைக்கு அடுத்த சீட்டில்,  மனைவியின் புகைப்படத்தை ஒட்டினார். பின்னர் அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் ''இப்படிதான் நான் எனது தேனிலவுக்காக பயணிக்கிறேன்.'' என பதிவிட்டார். அந்த புகைப்படம் வெளியுறவுத்துறையை புரட்டிப் போட்டு விட்டது.

உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் இருந்து  ஃபைஷானின் ட்விட்டுக்கு பதில் கிடைத்தது.'' உங்கள் மனைவியை உடனடியாக என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள், அவர் உங்கள் இருக்கையின் அருகே இருப்பார்'' என சுஷ்மா அதில் கூறியிருந்தார். பின்னர் அடுத்த ட்வீட்டில்'', நாளையே உங்கள் மனைவிக்கு டூப்ளிகேட் பாஸ்போட் வழங்கப்பட்டு விடும் ''என்றும் தெரிவித்திருந்தார்.


அதன்படியே டூப்ளிகேட் பாஸ்போர்ட் சானாவிடம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் சானா, தேனிலவுக்கு சென்று சேர்ந்தாரா என இதுவரை தகவல் இல்லை.

மத்திய அமைச்சர்களில் சோஷியல் மீடியா வழியாக உதவி கேட்பவர்களுக்கு உதவுவதில், சுஷ்மாவும் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவும் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 




No comments:

Post a Comment