வரி வருவாய்களைப் பொறுத்தவரை நேர்முக வரி, மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளது. தனி மனிதர் அரசுக்கு நேரடியாகச் செலுத்துகின்ற 'தனிநபர் வருமான வரி' அல்லது நிறுவனங்கள் செலுத்துகின்ற 'பெருநிறுவன வருமான வரி' போன்றவை நேரடி வரிகள்.

ஆனால், ஒரு பொருட்களை உற்பத்தி செய்து அதனைச் சந்தையில் விற்பனை செய்யும் வரை செலுத்துகின்ற கலால் வரி, வாட் வரி, சேவை வரி போன்றவை மறைமுக வரிகளாகும். ஆனால், ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது இப்போது புழக்கத்தில் இருக்கும் மறைமுக வரிகள் என்று சொல்லப்படும் எந்த ஒரு வரியும் இனி இருக்காது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது இனி எந்தெந்த மறைமுக வரிகள் இடம்பெறாது என்பது குறித்து வழக்கறிஞர் மற்றும் வரி நிபுணர் வைத்தீஸ்வரனிடம் கேட்டோம். அவர்
மறைமுக வரியைப் பொறுத்தவரை மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, சேவை வரி, சிறப்பு கூடுதல் வரி மற்றும் பொருள் குவிப்பு வரி என 4 வகையான வரி விதிக்கப்படுகிறது. இதில்
கலால் வரி (Excise Duty)
பொருள்களை உற்பத்தி செய்யும்போது செலுத்தும் வரியாகும்.
சேவை வரி (service tax)
சேவைகளுக்கும் விதிக்கப்படும் வரியாகும்.
சிறப்பு கூடுதல் வரி (Special Additional Duty)
வெளிநாடுகளிலிருந்து ஒரு பொருள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்போது உற்பத்தி வரிக்கு நிகராக விதிக்கப்படும் வரி.
பொருள் குவிப்பு வரி (Countervailing Duty)
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்படும் வரி.
இதைப்போல மாநில அரசும், மதிப்பு கூட்டு வரி, கொள்முதல் வரி, நுழைவு வரி மற்றும் மத்திய விற்பனை வரி போன்ற முக்கிய வரிகளையும், இதுதவிர சொகுசு வரி, கேளிக்கை வரி மற்றும் விளம்பர வரி போன்ற வரிகளையும் விதிக்கிறது. இதில்
மதிப்பு கூட்டு வரி (வாட் -VAT) (Value Added Tax)
பொருட்களை மதிப்புக் கூட்டி வேறு ஒரு பொருளாக விற்கும்போது விதிக்கப்படும் வரியாகும்.
மத்திய விற்பனை வரி (Central Sales Tax)
ஒரு மாநிலத்திலிருந்து வேறு ஒரு மாநிலத்திற்குப் பொருட்களை எடுத்துச் செல்லும்போது உற்பத்தி செய்த மாநிலம் விதிக்கும் வரி
கொள்முதல் வரி (Purchase Tax)
விற்பனை வரியைச் செலுத்தாமல் இருப்பவர்கள் பொருட்களை கொள்முதல் செய்யும்போது செலுத்தும் வரிதான் கொள்முதல் வரியாகும்.
நுழைவு வரி (Entry Tax)
பொருட்களை வாகனத்தில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு எடுத்துச் சொல்லும்போது
விதிக்கப்படும் வரியாகும்.

சொகுசு வரி (Luxury Tax)
ஆடம்பர வசதிக்கான விதிக்கப்படும் வரி
கேளிக்கை வரி (Entertainment Tax)
கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு விதிக்கப்படும் வரியாகும்
விளம்பர வரி (Advertising Tax)
விளம்பரங்களுக்கு விதிக்கப்படும் வரி
ஆக மத்திய அரசு, மாநில அரசு என இரண்டு அரசுகள் விதிக்கும் அனைத்து மறைமுக விதிகளும் சரக்கு மற்றும் சேவை வரி என்று சொல்லப்படும் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது இனி இருக்காது. இந்த மசோதா அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த ஜிஎஸ்டி மசோதாவில் எத்தனை சதவிகிதம் என்பது இறுதியாகவில்லை.

No comments:
Post a Comment