ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் ரயில்வே வீரர்களுக்கு, ரூ. ஒரு கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்து உள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் , நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 31வது ஒலிம்பிக் திருவிழா, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று(சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில் வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

இதில், 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள், 28 வகையான விளையாட்டுகளில், 306 போட்டிகளில் பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகி உள்ளார்கள்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் 120 வீரர், வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி, 15 விளையாட்டுகளில் களம் காண்கிறது. இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமை தாங்கி அணிவகுப்பில் கொடியேந்தி சென்றார்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் மட்டுமே வென்றது. அதைவிட அதிகமாக இந்த முறை இந்திய அணி பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய ரயில்வே துறையைச் சேர்ந்த 35 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ரயில்வே வீரர்களை ஊக்குவிக்கும்விதமாக, அவர்களுக்கு ரொக்க பரிசுகளை ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி, ரியோ ஒலிம்பிக் போட்டியில் ரயில்வே வீரர்கள் தங்கம் வென்றால் ரூ.1 கோடி ரொக்கப் பரிசும், அவர்களுக்கு பணி உயர்வும் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட உள்ளன. இதுதவிர முதல் 8 இடங்களுக்குள் வரும் வீரர்களுக்கு ரூ.30 லட்சமும், போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment