Monetize Your Website or Blog

Wednesday, 3 August 2016

அஜித்துக்கு வில்லன் யார்?


கடந்த மே மாதம் தனது குழுவினருடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றார், இயக்குனர் சிவா. அஜித் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களைத் தேர்வு செய்தார். ஆகஸ்ட் மாசம்  சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்காக அந்த பகுதி லொகெஷன் மேனேஜர்கள் வாயிலாக, அந்தந்த அரசாங்கத்திடம் அனுமதி பெற்று வந்தனர். ஜூலை 25-ம்தேதியே  கேமராமேன் வெற்றி, ஸ்டன்ட் மாஸ்டர் செல்வா ஆகியோருடன் புறப்பட்டுச் சென்றார், சிவா.  ஜூலை  30-ம்தேதி  ஐஸ்லாந்துக்கு புறப்பட்டார் அஜித். முதன்முதலில்  சண்டைக் காட்சியை படமாக்குகிறார், சிவா.  ஐரோப்பாவின் ஐந்து நாடுகளில் இரண்டு மாதம்தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.


முதலில் அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்கா பேசப்பட்டார். சிவா கால்ஷீட் கேட்ட தேதிகளில் அனுஷாவுக்கு தெலுங்குப்பட ஷூட்டிங் இருந்ததால்  அஜித்துடன் நடிக்க முடியாததைத் தெரிவித்தார்.  காஜல் அகர்வால் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து  'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக இருந்து அவரிடமும் பேசினார்கள். திடீரென கமல் பெரியமகள் ஸ்ருதிஹாசன், அஜித்தை  போனில் தொடர்பு கொண்டார்.  'என் தங்கச்சி அக்‌ஷரா  ஏற்கெனவே  'ஷமிதாப்' இந்திப் படத்துல தனுஷ்கூட  நடிச்சிருக்கா. தமிழ்ப் படத்துல இன்னும் அறிமுகம் ஆகலை. உங்களோட படத்துல முதன்முதலா அறிமுகம் ஆனா நல்ல ரீச் கிடைக்கும்' என்று அஜித்திடம் பேசினார், ஸ்ருதிஹாசன்.  அதன்பின் ரித்திகா சிங் நீக்கப்பட்டார். அவர் நடிக்க இருந்த கேரக்டரில் அக்‌ஷராஹாசன் சேர்க்கப்பட்டார்.


 இந்திய உளவாளி வேடத்தில் நடிக்கும் அஜித்துடன் காமெடி வேடத்தில் நடிக்க  ஏற்கெனவே கருணாகரனை ஒப்பந்தம் செய்தனர். இப்போது அவருடன்  'லொள்ளு சபா' சுவாமிநாதனும் நடிக்கிறார். அஜித்துக்கு வில்லனாக நடிக்க  முதலில் விஜய்சேதுபதியை அணுகினார். அவர்  மெளனமாக 'நோ' சொல்லி விட்டார். அதன்பின்  அர்ஜூன், அரவிந்த்சாமி, பிரசன்னாவை கேட்டனர். அவர்களும் ஏனோ ஜகா வாங்கினார்கள். இப்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்க பாபிசிம்ஹாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்கின்றனர்.  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாசம்  இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். தமிழ் புத்தாண்டு அன்று 'பாகுபலி-2' வெளியாவதால் அஜித் பிறந்த நாளான மே -1-ம்தேதி 'தல- 57' ரிலீஸாகிறது.    



No comments:

Post a Comment