தமிழ் சினிமாவின் பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான 'வியட்நாம் வீடு' சுந்தரம் சென்னையில் இன்று(சனிக்கிழமை) காலமானார்.

தமிழ்த் திரையுலகில், 1970-ம் ஆண்டு 'வியட்நாம் வீடு' என்ற திரைப்படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமானவர் சுந்தரம். இவர் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபல திரை நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார்.
இவரது கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான 'கௌரவம்' படம் பலராலும் பாராட்டப்பட்டது. மேலும், பல பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'வள்ளி' தொடர்வரை அவர் நடித்திருக்கிறார்.இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவர் சுந்தரம்.
76 வயதான சுந்தரம், கடந்த ஒரு வார காலமாக, மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்பட்டு வந்தார். இடையில் வயிற்றுக் கோளாறும் சேர்ந்து கொண்டது. தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென நேற்று(வெள்ளி) நள்ளிரவு 1.20 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு அனு, சுவேதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

‘தற்போது, சென்னை தி.நகர் ராமன் தெருவில் இருக்கும் அவரது உடல், மாலை 3 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும்’ என அவரின் மருமகன் பார்த்தசாரதி தெரிவித்தார்.

No comments:
Post a Comment