உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஹாட்ரிக் ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். உசேன் போல்ட் என்றதுமே அவரது ஃபேவரைட் மூவ் தான் அனைவருக்கும் நினைவில் வரும் அதற்கு பின்னால் உள்ள காரணம் தெரியுமா?
2008ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போது இந்த ஃபேவரை மூவ்வுடன் போஸ் கொடுத்தார். அடுத்த இரண்டு முறை வென்ற போதும் இதே போஸ் கொடுத்து மக்களை குதூகலத்தில் ஆழ்த்தினார்.

இந்த மூவ் குறித்து அவர் கூறியிருப்பது ஜமைக்காவின் பிரபல மியூஸிக் ஆல்பமான டான்ஸ்ஹாலின் ''To Di World'' -ல் இடம் பெற்ற மூவ். அது எனக்கு பிடித்திருந்ததால் அதை நான் செய்தேன். நான் எப்படி செய்யும் போது உலக மக்களுடன் இணைந்திருப்பதாய் உணர்கிறேன் என்றும், மக்கள் இதனை விரும்பாவிட்டால் இதனை நான் நிறுத்திவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு சமூக வலைதளங்களில் இதனை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். நீங்கள் இதனை தொடர வேண்டும் என்று பலர் பகிர்ந்துள்ளனர்.

No comments:
Post a Comment