Monetize Your Website or Blog

Monday, 1 August 2016

செல்பியால் வந்த சோதனை: தடகள வீராங்கனை பரிதாபச் சாவு

த்திய பிரதேச மாநிலத்தில் தடகள வீராங்கனை செல்பி எடுக்க முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






உத்தரகாண்ட் மாநிலத்தைச்  சேர்ந்தவர் பூஜாகுமாரி. தேசிய தடகள ஒட்டப்பந்தய வீராங்கனை. இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் தடகள பயிற்சியில் ஈடுபட்டுக்  கொண்டிருந்தார். அப்போது, விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் கட்டிடத்திலிருந்து தனது சக வீரர்களுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அச்சமயம் எதிர்பாராத விதமாக அருகிலுள்ள குளத்தில் தவறி விழுந்துள்ளார். பூஜா குமாரிக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் கூறும் போது, " பூஜா குமாரி குளத்தில் விழுந்தவுடன், அவருடன் இருந்த சக வீரர்களுக்கும்  நீச்சல் தெரியாததால் அவரைக்  காப்பாற்ற இயலவில்லை. மேலும் உதவிக்கு விடுதியில் இருந்து சிலர் வருவதற்குள் அவர் உயிரிழந்து விட்டார்" என்றனர்.
 
தேசிய தடகள வீராங்கனை பூஜா குமாரி இறந்த சம்பவம் அங்கிருந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment