Monetize Your Website or Blog

Thursday, 4 August 2016

அட...! ஜெயலலிதா, ஒபாமா, மார்க், கருணாநிதியிடம் இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா..?!

ம்மில் சிலர் ஒரே நிற, அல்லது மிகவும் பிடித்த ஆடையை தொடர்ந்து அணிபவராக இருப்பர். அவரை அந்த சட்டையை வைத்தே கூட அடையாளம் கூறும் அளவுக்கு அவரை அனைவருக்கும் தெரிந்திருக்கும்.உலகின் பிரபலங்கள் துவங்கி,  உங்கள் அலுவலகத்தில் உள்ள உங்களது சக பணியாளர் வரை அனைவரையுமே நீங்கள் இதேபோன்ற ஆட்டிட்யூடில் ( attitude) பார்க்கலாம். 


நாம் இங்கு பார்க்கும் சில பிரபலங்கள் கூட இதே போன்றுதான் தனக்கென தனி உடை அடையாளங்களை கொண்டு காணப்படுகின்றனர். 

மார்க் சக்கர்பெர்க்:

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பெயரை கூகுளில் புகைப்படமாக தேடினால்,  அதில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான புகைப்படங்களில் சாம்பல் கலர் டி-ஷர்ட்டுடன் மட்டுமே காணப்படுவார். எந்த ஊரில் பேசினாலும் சரி, எந்த நாடாக இருந்தாலும் சரி இவரது உடை இது மட்டும்தான். அதில் ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன், மெஸேஜ், ரிக்வெஸ்ட் லோகோக்கள் இடம் பெற்றிருக்கும். இதனை மேலாண்மை தத்துவங்கள் இவரிடம் கொள்கையில் இருந்து மாறாத தலைவர் என்பதையே காட்டுவதாகவும் கூறுகின்றன. 

ஜெயலலிதா:


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்கள் துவங்கி, பொதுக்கூட்டம், சட்டசபை என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஜெயலலிதா பச்சை நிற புடவை அணிந்துதான் வந்திருப்பார். அவரை அடையாளப்படுத்தும் புகைப்படங்களுமே,  அவரை அதே நிற உடையில்தான் காட்டும். சரியோ தவறோ,   தன் முடிவுகளில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை தொடர்பவர். தனது நிர்வாகத்திற்கு ஒத்துவராத அமைச்சரை சட்டென்று நீக்கும் குணம் கொண்டவராக இருப்பார். 

ஒபாமா:

தன் பேச்சால் அமெரிக்க அதிபராக உருவாகிய பாரக் ஒபாமாவை,  உங்களால் சாதாரண தோற்றத்தில் பார்த்திருக்க முடியாது.  அனைவரது மனதிலும் கோட் சூட்டுடன் உள்ள ஒபாமாதான் நமக்கு நினைவில் வருவார். இன்றைக்கு பலர்,  அதிபர் தேர்தலுக்கான போட்டியில் வரிசையில் நின்றாலும் ஒபாமாவுக்கு என ஒரு தனி இடம் அமெரிக்க அதிபர்கள் பட்டியலில் உண்டு.

கிறிஸ்டோபர் நோலன்:

வித்தியாசமான அறிவியல் தொடர்பான படங்களை எடுக்கும் இவர்,  உலக சினிமாவிற்கென ஒரு இலக்கணம் வகுத்தவர். இவரது படங்களை போலவே அடர்நிறம் கொண்ட உடையுடன் காணப்படுவார். இது தான் இவரது படங்களின் வெற்றி ரகசியமும் கூட.

கருணாநிதி:



திமுக தலைவர் கருணாநிதியை பொறுத்தவரை சமீப வருடங்களாகவே அவரை எப்போதும் மஞ்சள் துண்டு, கருப்பு கண்ணாடியுடன் மட்டுமே பார்த்திருப்போம். அண்மைகாலமாக இதுதான் அவரது மாறாத அடையாளமாக இருந்து வருகிறது. அவர் நீண்ட காலமாக ஒரு கட்சிக்கு தலைவராகவும், 90 வயதுக்கு மேலும்  சீரிய தலைமை பண்புடன் செயல்படுவதையும் அனைவரும் பார்த்திருப்போம். 

ஸ்டீவ் ஜாப்ஸ்:
இவர் புதுமைகளுக்கு பெயர் பெற்ற தலைவர். நிறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.  ஆப்பிள் நிறுவன லோகோவில் இவரது திறமை நன்கு வெளிப்பட்டிருக்கும். ஆப்பிள் நிறுவன நிகழ்வுகளிலும் சரி, பொது சந்திப்புகளிலும் சரி, ஜாப்ஸை ப்ளாக் டி-ஷர்ட்டில் பார்க்க முடியும். அதுதான் ஜாப்ஸின் தனித்துவம். ஜாப்ஸ் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்,  சிறந்த ஆசிரியர். இவரைதான் தனது குருவாக கொண்டு செயல்படுகிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.


இவர்கள் எப்படி பட்டவர்கள்?

இவர்கள் ஒரே சீரான, வெற்றியை நோக்கிய பயணத்தை தொடர வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இது போன்ற குணம் கொண்டவர்கள் நிச்சயம் தலைமை பதவி வகிப்பவர்களாக இருப்பார்கள் அல்லது தலைமை பண்போடு காணப்படுவார்கள்.

இவர்கள் தங்கள் முடிவுகளில் தெளிவாகவும், முடிவுக்கு முன் நீண்ட திட்டமிடலையும், முடிவுக்கு பின் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் அதற்கான ப்ளான் B-யும் கையில் வைத்திருப்பார்கள்.

இவர்கள் வெற்றி, தோல்வி இரண்டையும் ஒரே மாதிரியாக அணுகுவார்கள். 


கலர் ரகசியம் இது தான்!

ஏன் இவர்கள் இப்படி ஒரே கலரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால்,  அதுதான் அவர்களை பிரதிபலிக்கும் சுய பிராண்டிங் கருவியாகிறது. இவர்களின் பிராண்டிங்க்கிற்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது.

ஒரே மாதிரியாக செயல்படுபவர், மிஸ்டர் கன்ஸிஸ்டன்ஸி என்ற விஷயத்தை எல்லாம் இது எளிமையாக விளக்கி விடும்.



எப்படி ஒரு பிராண்டை ஒரே கலரில் மனதில் பதிய வைப்பார்களோ,  அதே உத்திதான் இந்த தனிமனித பிராண்டிங்கிற்கும். மக்கள் இதே நிற உடையில் இவர்களை பார்த்து பழகிவிட்டால் யாரை இந்த உடையில் பார்த்தாலும் இவர்களை நினைவில் கொள்வார்கள்.

கொஞ்சம் யோசிச்சு இப்ப சொல்லுங்க பாஸ்... நீங்க இதே மாதிரி ஒரே நிற உடையை விரும்பி அணிகிறீர்கள் என்றால்,  அந்த உடை அணிந்து செல்லும் நாட்களில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் செயல்திறன் அதிகரித்து காணப்படும்.
அப்படி இருந்தால் நீங்களும் ஒரு தலைவனுக்கு உரிய தகுதியுடையவரே...!




No comments:

Post a Comment