‘காங்கிரஸ் கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டார்’ என்ற காரணத்தை சொல்லி, முன்னாள் எம்.எல்.ஏ விஷ்ணுபிரசாத்தை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார் இளங்கோவன். ‘ என்னை நீக்கும் அதிகாரம் மாநிலத் தலைவருக்கு இல்லை‘ எனக் கொதிக்கிறார் விஷ்ணுபிரசாத்.
சட்டமன்றத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத். “ தோல்விக்கு முழுக் காரணமே இளங்கோவன்தான். ஒருமுறைகூட தேர்தல் பிரசாரத்திற்காக என்னுடைய தொகுதிக்கு அவர் வரவில்லை. கட்சியின் அதிகாரப்பூர்வ பி ஃபார்ம் கொடுப்பதில்கூட தாமதம் செய்தார். பெண் தலைவர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதால்தான் தாய்மார்களின் வாக்குகளை எங்களால் பெற முடியவில்லை. தோல்விக்கு முழு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் விலக வேண்டும்” எனப் பேசி வந்தார் விஷ்ணுபிரசாத். இதனால் கொந்தளித்துப் போன ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரைக் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
விஷ்ணுபிரசாத்திடம் பேசினோம். “நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கிறேன். ஊடகப் பிரிவிலும் தொடர்ந்து செயல்படுகிறேன். என்னை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் இளங்கோவனுக்கு இல்லை. டெல்லியில் இருந்து சொன்னால் மட்டுமே கட்சியில் இருந்து விலகுவேன். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றுதான் நாள்தோறும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். கட்சியை வளர்க்கும் எண்ணம் அவருக்கு சுத்தமாக இல்லை.
சட்டமன்றத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத். “ தோல்விக்கு முழுக் காரணமே இளங்கோவன்தான். ஒருமுறைகூட தேர்தல் பிரசாரத்திற்காக என்னுடைய தொகுதிக்கு அவர் வரவில்லை. கட்சியின் அதிகாரப்பூர்வ பி ஃபார்ம் கொடுப்பதில்கூட தாமதம் செய்தார். பெண் தலைவர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதால்தான் தாய்மார்களின் வாக்குகளை எங்களால் பெற முடியவில்லை. தோல்விக்கு முழு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் விலக வேண்டும்” எனப் பேசி வந்தார் விஷ்ணுபிரசாத். இதனால் கொந்தளித்துப் போன ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரைக் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
ஒருநாள்கூட என்னைத் தொடர்பு கொண்டு, ‘ தேர்தல் வேலை எப்படிப் போகிறது?’ என்று அவர் கேட்கவில்லை. கட்சித் தலைமையில் இருந்து நோட்டீஸோ, வால்போஸ்டரோ எதுவுமே கொடுக்கவில்லை. பிறகு எதற்காக ஒரு மாநிலத் தலைவர்? மாநிலம் முழுவதும் விருப்ப மனு வாங்குவதற்காக ஐந்தாயிரம், பத்தாயிரம் என வசூல் செய்தார். அந்த தொகையே நான்கு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். அந்தப் பணம் எங்கே போனது?
இளைய தலைமுறையினர் கட்சிக்குள் வளர்வதை அவர் விரும்பவில்லை. இன்றைக்கு சிதம்பரத்தின் முக்கியத்துவத்தை மேலிடம் உணர்ந்துவிட்டது. அதனால்தான் அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை கட்சித் தலைமை கொடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் கட்சியின் மூத்தவர்களை ஒதுக்கி வைத்துவிட்டுச் செயல்பட்டார் இளங்கோவன். அதன் விளைவை தேர்தல் முடிவுகள் காட்டிக் கொடுத்துவிட்டது.

தன்னுடைய ஆதரவாளர்களுக்கு என முப்பது இடங்களை எடுத்துக் கொண்டார். அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்களா? தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துவிட்டது. இந்தத் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று இளங்கோவன் பதவி விலக வேண்டும். விரைவில், அகில இந்திய தலைமையை சந்தித்து என்னுடைய நிலையை விளக்குவேன்” என்றார் கொந்தளிப்போடு.
இளங்கோவனுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடுகிறார்கள். மீண்டும் டெல்லியில் பஞ்சாயத்து களைகட்டப் போகிறது.
No comments:
Post a Comment