Monetize Your Website or Blog

Friday, 20 May 2016

வரும் 23ம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார்!

நடந்து முடிந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை அஇஅதிமுக பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கிறார்.

    



வரும் 23ம் தேதி சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்  நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார். தமிழக ஆளுநர் ரோசையா அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அன்றே ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இதனையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று(வெள்ளி)மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முதல்வராக ஜெயலலிதா முறைப்படி தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்.இதற்காக,புதியதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக மதியம் இரண்டு மணியளவில் ஜெயலலிதா சென்னையில் உள்ள அண்ணா,பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர்.சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.     

பதவி ஏற்பு விழா நடைபெறும் சென்னை  பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்,  பதவி ஏற்பு விழாவுக்கான  ஏற்பாடுகள் துரித கதியில் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் 134 தொகுதிகளை  அதிமுக வென்று புதிய சாதனைப் படைத்துள்ளது.திமுக-காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வென்றுள்ளது. அதிக இடங்களில் அதிமுக தனித்தே வென்றுள்ளதால் கடந்த 32 ஆண்டுகளாக இருந்துவந்த சாதனையை, ஆட்சியைத் தக்கவைத்ததன் மூலம் ஜெயலலிதா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment