Monetize Your Website or Blog

Friday, 20 May 2016

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்!' - விஜயகாந்த்

இந்த தேர்தலில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால், எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்' என்று கூறி உள்ளார்.

         



தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அ.தி.மு.க. 134 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களை பிடித்து பலம்வாய்ந்த எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆனால், தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி-த.மா.கா. வேட்பாளர்கள் ஒரு இடங்களில்கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வியை சந்தித்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால், எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்.’ தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நல கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி" என்று கூறி உள்ளார்.



No comments:

Post a Comment