Monetize Your Website or Blog

Tuesday, 17 May 2016

தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசினால்... அச்சச்சோ..! -வடிவேலுவின் வெடி

தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசினால் நோட்டீஸ் அனுப்புவார்கள் என்று ஓட்டுப்போட்டுவிட்டு வந்து நடிகர் வடிவேலு சீரியசாக கூறினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, விஜயகாந்த், வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர்.


          

அந்த வரிசையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் வடிவேலு. தனது வாக்கை பதிவு செய்தபின் நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''அனைவரும் ஜனநாயக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு தேர்வு போல இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று எல்லோருக்கும் ஆர்வம் உள்ளது. மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்" என்றார். அப்போது செய்தியாளர்கள், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த வடிவேலு, ''தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசினால் நோட்டீஸ் அனுப்புவார்கள். அது அவர்களுடைய முடிவு" என்றார். உடனே, சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் இந்தமுறை பிரசாரத்துக்குச் செல்லவில்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''அந்தக் கடையை மூடுங்க" என்று தனது ஸ்டைலில் காமெடியாக சொல்லிவிட்டு கிளம்பினார்.




No comments:

Post a Comment