
பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களுடன் கூட்டணி அமைக்கக் கோரி பணம் வழங்க முன்வந்ததாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு விஜயகாந்த் அளித்த பேட்டியில், "ஊழல் புரிந்து நாட்டை நாசப்படுத்திய அ.தி.மு.க., தி.மு.க கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க, தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை.
பா.ஜ.க.வும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முன்வந்த போதும் அவர்களுடன் நான் கூட்டணி வைக்கவில்லை. முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்காவிட்டாலும், மக்கள் நலக்கூட்டணியுடன் தான் கூட்டணி வைத்திருப்பேன். அ.தி.மு.க., தி.மு.க கட்சிகளுடன் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சியினர் கூட்டணிக்கு சென்றிருக்கலாம். நான் கூட கூட்டணிக்கு சென்றுவிட்டு மூன்று மாதத்தில் வெளியேறிவிட்டேன். மக்கள் நலக்கூட்டணியினர் இதுவரைக்கும் ஆட்சியமைக்காத சுத்தமானவர்கள் என்பதாலேயே அவர்களுடன் கூட்டணி அமைத்தேன்.
சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைக்கக் கோரி பா.ஜ.க, அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தனக்கு பணம் அளிக்க முன்வந்தன. கருத்துக் கணிப்புகளை தான் நம்பவில்லை. மே 19ம் தேதி தேர்தல் முடிவு தங்கள் கூட்டணிக்கு சாதகமாக வரும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:
Post a Comment