ஜெயபால் தஞ்சையில் நகரத்திற்கு சற்று தள்ளி இருக்கும் பகுதியில் வசிப்பவர். சமீபத்தில்தான் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவர் வசிக்கும் பகுதியிலேயே ஒரு புதிய தலைமுறை வங்கி (New Generation Bank) இருக்கிறது. ஆனால் அதில் அவர் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை, 6 கி.மீ தள்ளி இருக்கும் பொதுத்துறை வங்கியில்தான் கணக்கு வைத்திருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு ஓய்வூதிய பணம் அந்த வங்கியில் வரவு வைக்கப்படுவதில்லை. வேறொரு வங்கியில்தான் வரவு வைக்கப்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறை தனது ஓய்வூதியம் வரும் வங்கிக்கு சென்று, பணத்தை எடுத்து, மீண்டும் சில கி.மீ க்கள் பயணம் செய்து, அந்த பொதுத்துறை வங்கியில், தனது சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்வார். ஒரே காரணம் அந்த வங்கிக்கும், அவருக்கும் உள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு.
அவர் வீடு கட்ட அந்த வங்கிதான் கடன் அளித்தது. தனது மகனுக்கு கல்விக் கடன் அந்த வங்கிதான் அளித்தது. அதைத்தாண்டி அந்த வங்கியின் ஊழியர்கள் அனைவரும் அவருக்கு நல்ல பழக்கமானவர்கள். அவர் அந்த பிணைப்பை இழக்க விரும்பவில்லை. அதற்காக சில கி.மீட்டர் பயணம் செய்யவும் தயாராக இருக்கிறார்.
ஜெயபாலின் மனநிலைதான் பெரும்பாலான இந்தியர்களின் மனநிலை. அவர்களுக்கு வங்கி என்பது வெறும் பணப்பரிமாற்றம் செய்யும் இடம் மட்டும் கிடையாது. ஒவ்வொரு இந்தியனுக்கும் வங்கிகளுடன் ஒரு உணர்வுபூர்வமான பந்தம் இருக்கும். ஏனெனில் நமது வேர்கள் அப்படி.
எனக்கு தெரிந்த ஒருவர், தருமபுரியில் வளர்ந்துவரும் தொழில் அதிபர். ஒரு நாள் தன்னுடன் வணிகத்தில் ஈடுபடுபவருக்கு நான்கு லட்ச ரூபாய்க்கான காசோலையை கொடுத்துவிட்டார். ஆனால் அவரின் வங்கிக் கணக்கில் அன்று ரூபாய் 3.90 லட்சம்தான் பணம் இருந்தது. அதை அவர் கவனிக்கவில்லை. அந்த காசோலை வங்கிக்கு வந்தது. பல்லாண்டுகளாக அந்தவங்கியில் கணக்கு வைத்திருக்கும் அந்த தொழில் அதிபரின் காசோலையை பவுன்சாக்க விரும்பவில்லை அந்த வங்கி மேலாளர். தொழில் அதிபருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தன் கையிலிருந்து ரூபாய் பத்தாயிரத்தை அவர் கணக்கில் வரவு வைத்து. அந்த செக்கை கிளீயர் செய்தார்.
இதுதான் இந்தியாவில் வங்கிக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள பந்தம். அது பணத்திற்கு அப்பாற்பட்டது.
சரி... ஏன் இப்போது இந்த சம்பவங்கள் எல்லாம் என்கிறீர்களா...? விஷயம் இருக்கிறது. மத்திய அரசு, மீண்டும் வளர்ச்சி என்ற காரணத்தை கூறி, 27 வங்கிகளை 6 பெரிய வங்கிகளாக இணைக்க திட்டமிட்டுள்ளது.

இணையும் வங்கிகள்:

இதன்படி, ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூரை ஒரு வங்கியாகவும்;
பஞ்சாப் நேஷனல் பேங்க், அலகாபாத் பேங்க், கார்ப்பரேஷன் பேங்க், இந்தியன் பேங்க் மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸை ஒரு வங்கியாகவும்;
பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா, விஜயா பேங்க் மற்றும் ஆந்திரா பேங்கை ஒரு வங்கியாகவும்;
பேங்க் ஆஃப் பரோடா, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, பாரதிய மகிளா பேங்க், பஞ்சாப் மற்றும் சிந்து பேங்கை ஒரு வங்கியாவும்;
கனரா பேங்க், இந்தியன் ஒவர்சீஸ் பேங்க், சிண்டிகேட் பேங்க், யூகோ பேங்கை ஒரு வங்கியாகவும்;
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் தினா பேங்கை ஒரு வங்கியாகவும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வங்கிகளை இணைப்பதற்கான காரணங்களாக அரசு சொல்வது, உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்ள வலிமையான வங்கிகள் தேவைப்படுகின்றன, அதிக மூலதனம் தேவைப்படுகிறது என்பதுதான். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் மற்ற வங்கிகளை இணைப்பதன் மூலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 26,06,658 கோடியாக உயருகிறது. இதனால் அதன் கடன் கொடுக்கும் திறன் அதிகரிக்கும், தேசம் வளர்ச்சி அடையும், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்றார் போல் தம்மை தகவமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். இது அரசு முன் வைக்கும் வாதம்.
அரசின் வாதம் சரியா...?

ஆனால் இந்த வாதமே முட்டாள்தனமானது என்கிறார்கள் வங்கி தளத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள்.
இது குறித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் ஃபிரான்கோ ராஜேந்திர தேவ், “உலக அளவில் வங்கிகளை இணைத்த விஷயங்களை ஆராய்ந்தால், அதில் பத்தில் ஏழு தோல்வியை சந்தித்துள்ளது. உலக உதாரணங்கள் கூட வேண்டாம். நம் உள்ளூர் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நஷ்டத்தில் இயங்கி வந்த நியு பேங்க் ஆஃப் இந்தியாவுடன், பஞ்சாப் நேஷனல் வங்கியை இணைத்தார்கள்... என்ன ஆனது? பல ஆண்டுகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியும் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தது. அதை சரி செய்யவே பத்து ஆண்டுகள் ஆனது. புதிய தலைமுறை வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கியுடன், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸை இணைத்தார்கள்... இன்று வரை ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் தடுமாறி வருகிறது.
வங்கிகளை இணைப்பதன் மூலம் பிரச்னையை பெரிதாக்குகிறார்களே அன்றி, உண்மையில் அவர்கள் தீர்வை தேடவில்லை. ஒரு சின்ன அமைப்பில் பிரச்னை இருக்கிறதென்றால் அந்த அமைப்பிற்குள்ளேயே தீர்வை தேடி சிக்கலை சரி செய்ய வேண்டும். அதை விடுத்து, அதை பிரச்னை இல்லாத இன்னொரு அமைப்புடன் சேர்ப்பது. அந்த அமைப்பையும் பிரச்னைக்கு உள்ளாக்குமே தவிர, உண்மையான தீர்வாக இருக்காது. இது ஒட்டு மொத்த வங்கித் துறையையே பாழாக்கிவிடும்...” என்று தன் அச்சத்தை வெளிபடுத்துகிறார்.
சிறியதே அழகு:

ஐரோப்பிய சிந்தனையாளர் ஷூமெக்கரின் சிறியதே அழகு தத்துவம் சூழலியலுக்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும். இவர்கள் பெரிய வங்கிகள் வலிமையாக இருக்கும் வாதத்தை முன் வைக்கிறார்கள். ஆனால், 2008 உலகப் பொருளாதார மந்த நிலையின் போது, உலகத்தின் பெரிய வங்கியான லேமன் பிரதர்ஸ் வங்கி தடுமாறி போனது. கடந்த நிதிநிலை அறிக்கையில் கூட உலகத்தின் மற்றொரு பெரிய வங்கியான பேங்க ஆஃப் அமெரிக்கா நஷ்ட கணக்கையே காண்பித்துள்ளது. ஆகையால், பெரியது வலிமையானது, அதை சிதைக்க முடியாது என்ற அரசின் வாதத்தை நாம் ஒத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்.
வங்கி ஊழியர்கள் பாதிப்படைவார்கள்:
இந்த வங்கிகளை இணைத்தால், ஒரு லட்சம் ஊழியர்கள் உபரியாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. நிச்சயம் இவர்கள் அனைவரையும் கட்டாய ஓய்வில் வங்கிகள் அனுப்பிவிடும். அதுமட்டுமல்ல, வங்கித் துறையில் வேலைவாய்ப்பிற்கான வாசற் கதவுகள் அடைக்கப்படுகிறது. ஏற்கெனவே வேலையின்மை பிரச்னை அதிகமாக இருக்கும் ஒரு தேசத்தில், இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சாமானியனுக்கு இதனால் என்ன பாதிப்பு...?
சாமானியனுக்கு இதனால் என்ன பாதிப்பு...?
அரண்மனையின் கதவுகள் என்றும் சாமான்யனுக்கு திறக்கப்படுவதில்லை. அதுதான் வங்கிகள் இணைந்தாலும் நடக்கும் என்கிறார்கள் தொழிற்சங்கவாதிகள். இதனால் பெரும் முதலாளிகளுக்கு மேலும் மேலும் அதிக கடன் தரமட்டுமே இது வழிவகை செய்யும். சாமான்யர்களின் நிலை ஆழ்கடலில் பரிசலில் செல்லும் நிலைதான். அது மட்டுமல்ல, சாமான்யனுக்கும் வங்கிக்குமான அந்த உணர்வுபூர்வமான பந்தம் அறுபடும்.
இன்னொரு வாதத்தை அரசு தரப்பு முன்வைக்கிறது, அதாவது வங்கிகள் இணைந்தால், வேறு வங்கி ஏடிஎம் பயன்படுத்தும் போது நாம் செலுத்தும் சேவைக் கட்டணம் இல்லாமல் போகும் என்பது. இது வெறும் வெற்று வாதம். பொதுமக்கள் மேல் உண்மையாக அக்கறை இருந்தால், ஒரு ஆணையின் மூலம் இந்தக் கட்டணத்தை ரத்து செய்துவிட முடியும். அதற்காக வங்கிகளை இணைப்பதெல்லாம் தேவையற்றது.

வளர்ந்துவரும் சிக்கலை எப்படி எதிர்கொள்வது...?
வங்கிகளை இணைப்பதற்கான மற்றொரு காரணமாக அரசு சொல்வது, 'வங்கிகளுக்கும் மேலும் மேலும் மூலதனம் அளிக்க வேண்டி இருக்கிறது. இது நம் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது.' என்பதுதான். சரி ஏன் மீண்டும் மீண்டும் மூலதனம் அளிக்க வேண்டி இருக்கிறது...? ஏன் வங்கிகள் நஷ்ட பாதையில் செல்கிறது...? ஒரே காரணம் வாராக்கடன்தான். கடந்த ஆண்டு டிசம்பர் 31 வரையில், வங்கிகளுக்கான வாராக்கடன் தொகை 4.3 லட்சம் கோடி ரூபாய். இதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கமால், வங்கிகளை இணைப்பதன் மூலம், எப்படி வளர்ச்சி பாதையில் பயணித்துவிட முடியும் என்று அரசு நம்புகிறது...?
வங்கித் துறையை வளர்க்க வேண்டும் என்று அரசு உண்மையாக நினைக்குமானால், பெரும் நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன்களை முறைப்படுத்த வேண்டும். அவர்களிடமிருந்து, வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும். அதற்காக சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மல்லையாக்கள் சொகுசாக வெளிநாடு தப்பி செல்லும் இந்த தேசத்தில், இதுதான் தீர்வாக இருக்குமே அன்றி, வங்கிகளை இணைப்பது அல்ல...!

No comments:
Post a Comment