இந்திய அணியின் கேப்டன், தென்னாபிரிக்க அணியின் கேப்டன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர், ஐ.பி.எல்லின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கர்கள் என நட்சத்திர அந்தஸ்துடன் இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் முக்கியமான அணி என எல்லோராலும் கருதப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையில் வரிசையாக பல வீரர்கள் காயத்தால் தொடரில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
2008 முதல் 2015 வரை எட்டு சீசனிலும் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து அரையிறுதிக்கு வழிநடத்திய தோனி தான் புனே அணிக்கும் கேப்டன் என அறிவிக்கப்பட்ட போது ரசிகர்கள் உற்சாகமானார்கள். ரஹானே, டூ பிளசிஸ், ஸ்டீவ் ஸ்மித், கெவின் பீட்டர்சன், மிட்சல் மார்ஷ், ரவிசந்திரன் அஷ்வின், தோனி என சிறந்த வீரர்கள் அணியில் இருந்தாலும் புனே சொதப்புவது ஏன்? காரணம் தோனியா என்பது உங்களது கேள்வியாக இருந்தால் தோனி மட்டுமே காரணமில்லை என்பது தான் பதில். பிறகு சி.எஸ். கே மட்டும் எப்படி எட்டு சீசன்களில் தொடர்ந்து சிறப்ப்பாக விளையாடியது? தோனி தானே காரணம் என்பது உங்களது கேள்வியாக இருந்தால் தோனி மட்டுமே காரணம் இல்லை என்பது தான் பதில்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு அணியில் சிறந்த வீரர்கள் இருந்தால் மட்டுமோ அல்லது சிறந்த கேப்டன் இருந்தால் மட்டுமோ எப்போதும் அந்த அணி வெற்றி பெற்று விட முடியாது. அணி கலவை மிக முக்கியம். கேப்டன்சியும் முக்கியம். உலகின் தலைசிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு விளையாட ஆரம்பித்து 23 வருடங்களுக்கு பிறகு தான் கோப்பை வசமானது. உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உற்பத்தி செய்த நாடு தென்னாபிரிக்கா.ஆனால் இன்று வரை தென்னாபிரிக்க அணியால் ஐ.சி.சி கோப்பைகளை வெல்ல முடியவில்லை. சிறந்த வீரர்கள் இருந்தாலும், இக்கட்டான சூழ்நிலைகளில் வீரர்களை சிறப்பாக கையாளக்கூடிய ஒரு நல்ல கேப்டனை இன்னமும் தென்னாபிரிக்கா தேடிக்கொண்டு தான் இருக்கிறது.
சிறந்த வீரர்கள் கொண்ட அணியை சிறப்பாக நிர்வகிக்கும் திறன் பெற்றவர் தோனி. இதென்ன பெரிய விஷயம்.. சிறப்பான வீரர்கள் இருந்தால் இருந்தால் சாதரணமாக வெற்றி தேடி வருமே என நீங்கள் நினைத்தால் ....வெரி சாரி பாஸ். அணியில் நிறைய சிறந்த வீரர்கள் இருக்கும் போது ஈகோ வர வாய்ப்புண்டு. யாரை எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் தான் கேப்டனின் புத்திசாலித்தனம் இருக்கிறது. தோனியை பொறுத்தவரையில் அவர் களத்தில் இருக்கும் 11 பேரை கையாளுவதில் மிகவும் தேர்ந்தவர். தோனியின் ஸ்ட்ராட்டஜி இன்னமும் பலருக்கும் புரியாத புதிர். தோனி எப்படி உலகின் சிறந்த கேப்டனாக வலம் வருகிறார் என்பதை பலரும் ஆரய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். தோனி சிறந்த கேப்டன் தான் ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா! அது தான் இப்போது தோனிக்கும் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு அணி வெற்றி பெரும் போது அதில் உள்ள மைனஸ் விஷயங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அணி தோல்வி அடையும் போது மைனஸ் விஷயங்கள் தான் முன்னே வந்து நிற்கும். இப்போது தோனி அணியின் கதையும் இது தான்.
சரி பிளஸ் என்ன? மைனஸ் என்ன? நச்சுனு நாலு பாயிண்ட்ஸ்
1. ரஹானே - அம்சமும் இம்சையும்
தொடக்க வீரராக ரஹானே தான் புனே அணிக்கு நிறைய ரன்களை குவித்திருக்கிறார். எனினும் ரஹானே பொறுமையாக விளையாடக்கூடிய ஒரு வீரர் என்பதால் பவர் ப்ளேவில் புனே அணியால் பெரிய ரன்களை குவிக்க முடிவது இல்லை. ஆங்கர் இன்னிங்க்ஸ் மட்டுமே விளையாட ரஹானே ஆசைபடுகிறார். சில சமயங்களில் சிக்சருக்கு விரட்ட வேண்டிய பந்துகளை கூட ஒன்றிரண்டு ரன்களாக ஓடி எடுப்பதால் புனேவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. அதே சமயம் புனே அணியில் தற்போது பல வீரர்கள் பாரம் அவுட்டில் இருப்பதால், சுமாராக விளையாடினாலும் பார்மில் இருக்கும் ஒரே வீரர் என்பதால் அணியில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் தோனி மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்.

2. காயம் .... காயம் ... காயம்
ஐ.பி.எல் அணிகளில் பொதுவாக வெளிநாட்டு வீரர்கள் கலக்குவது வாடிக்கை. ஆனால் புனே அணியில் இடம்பெறும் நான்கு வெளிநாட்டு வீரர்களும் ஒரு சேர இதுவரை சோபிக்க வில்லை. ஒரு சில போட்டிகளில் ஏதோ ஒருவர் மட்டுமே ஒழுங்காக விளையாடியிருக்கிறார். இது புனே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் பீட்டர்சன், டூ பிளசிஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் என வரிசையாக வீரர்கள் காயமடைந்து வருவதும் இந்த சீசனில் தோனிக்கு தலைவலியாக அமைந்துவிட்டது.
3. சொதப்பிய சுழற்பந்து : -
நம்ம அஷ்வினுக்கு என்ன ஆச்சு என தெரியவில்லை. ஓரளவு சுழலுக்கு சாதகமான மைதானங்களில் கூட பந்துகளை திருப்புவதற்கு பெரும் பாடு படுகிறார். இந்த ஐபிஎல்லில் அஷ்வினின் பந்துகளை எதிர்கொள்வதில் எந்தவொரு பேட்ஸ்மேனும் பயப்படவில்லை. முருகன் அஷ்வின் நம்பிக்கையளுக்கும் விதத்தில் பந்து வீசினாலும் சர்வதேச தரத்தில் அவரது பந்துவீச்சு இல்லை. முருகன் அஷ்வின் புதிது என்பதால் அவர் இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுவதே பெரிய விஷயமாக இருக்கிறது தோனிக்கு. சுழற்பந்து வீச்சு பலமாக இல்லாதபோது அணிக்கு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையா என்பதை தோனி யோசிக்க வேண்டும் .

4. தோனி !
தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தோனி தவறுகிறார். நல்ல லைனில் , நல்ல லெந்தில் வீசப்படும் பந்துகளுக்கு தோனி திணறுகிறார். ஒரு போட்டியில் சிறப்பாக வெளுத்து கட்டினால் அடுத்த போட்டியிலேயே டெஸ்ட் போட்டி போல ஆட ஆரம்பித்து விடுகிறார். தோனியிடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.அதற்கு தகுதியானவர் அவர். 'தான் உட்பட அணியில் பலர் சரியாக விளையாடவில்லை' என தோனியே கூறியிருக்கிறார்.முப்பத்து நான்கு வயது நெருங்கும் வேளையில் தொடர்ந்து நான்கு மாதங்களாக ஓய்வே இல்லாமல் விளையாடுவதால் தோனியிடம் நிலையற்ற ஆட்டப்போக்கு இருக்கிறது. அணியை மேம்படுத்த கொஞ்சம் இடைவெளி தேவை என்றும் தோனி சொல்லியிருக்கிறார்.
பீல்டிங் அமைப்பதில் தோனி பொதுவாக கெட்டிக்காரர். ஆனால் இந்த சீசனில் இதுவரை தோனியின் வியூகங்கள் எடுபடவில்லை. தோனிக்கு மீண்டும் இது ஒரு கடினமான கால கட்டமாக அமைந்திருக்கிறது. அணியில் அடுத்த கேப்டன் என வர்ணிக்கப்படும் விராட் கோலியும் கேப்டன்சியில் சொதப்பி வருகிறார் எனினும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதால் விமர்சனங்களில் இருந்து தப்பிவிடுவதை நாம் மறுத்துவிட முடியாது. புனே அணிக்கு இன்னமும் பிளே ஆப் பில் நுழைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதை தோனி எப்படி அணுக போகிறார் என்பதை பார்க்கலாம். இர்பான் பதான், இஷ்வர் பாண்டே என இரண்டு வேகபந்து வீச்சாளர்களை தோனி புறக்கணிக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை. இர்பான் பதான் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அந்த ஒரு போட்டியிலும் அவருக்கு ஒரு ஓவர் மட்டுமே தந்தார் தோனி. அந்த ஒரு ஓவரிலும் சிறப்பாக வீசி ஏழு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் இர்பான்.
கடந்த காலங்களில் ஐ.பி.எல்லில் சிறப்பாக வீசிய இஷ்வர் பாண்டே ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது, இந்த இருவரும் இருந்தால் புனே அணி கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுமா என்பது தெரியாது. ஆனால் பல வீரர்கள் பார்மில் இல்லை, சில வீரர்கள் காயத்தால் அணியிலேயே இல்லை எனும்போது ஏன் இவ்விருவரையும் அணியில் சேர்க்ககூடாது ? தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த பாபா அபராஜித்துக்கு ஏன் வாய்ப்புகள் மறுக்கபடுகின்றன? என்பன போன்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

No comments:
Post a Comment