ஷோஃபியா அஃஷ்ரப். இணையம் தெரிந்த அனைவருக்கும் அவரை நிச்சயம் தெரிந்து இருக்கும். யார் அவர் என்று யோசிப்பவர்கள் கூட... அவர் இசையமைத்த ‘Kodaikanal Won't' பாடலை குறிப்பிட்டால், உடனே அடையாளம் கண்டுகொண்டு விடுவார்கள். கொடைக்கானலின் முக்கிய சூழலியல் பிரச்னையை, தனது ‘ராப்’ இசை மூலம் பொதுவெளிக்கு கொண்டு வந்தவர் ஷோஃபியா. இசை, ஆக்கத்திற்கான ஒரு ஆயுதம் என்று சொல்லும் அவர், இப்போது அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தி, ஒரு பாடலை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
' அனைவரும் வாக்களியுங்கள். உங்களுக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையெனில் NOTA விற்கு வாக்களியுங்கள். வாக்களிக்காமல் மட்டும் இருந்து, உங்கள் வாக்கை பிறர் தவறாக பயன்படுத்த நீங்களே காரணமாக இருந்துவிடாதீர்கள்...' என்று வாக்களித்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது அந்த பாடல்.

அவருடனான உரையாடலிலிருந்து...
ஒரு பக்கம் இளைஞர்கள் எந்த அரசியல் பிரக்ஞசையும் இல்லாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடக்கும் எந்த தலையாய பிரச்னை குறித்தும் கவலை இல்லாமல், வேறொரு உலகத்தில் வாழ்கிறார்கள்... அவர்கள் அனைவரும் வாக்களித்து மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது...?
இளைஞர்கள் அரசியல் பிரக்ஞை இல்லாமல் எல்லாம் இருக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்களுக்கு அது தேவையில்லை என்று நினைக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த பொது சமூகம்தான். இந்த சமூகம்தான் அவர்களிடமிருந்து அரசியலை அந்நியப்படுத்தியது. இப்போது அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று கிண்டல் செய்கிறது. மீண்டும் அவர்களை அரசியல்படுத்தும் சிறு முயற்சிதான் இந்த பாடல்.
சமூகத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. மழை வெள்ளத்திலிருந்து சென்னையை மீட்டவர்கள் இளைஞர்கள்தான். ஆனால், ஏன் அரசியலிலிருந்து மட்டும் ஒதுங்கியே இருக்கிறார்கள்... அரசியல் நம் வேலை இல்லை என்று அவர்கள் எண்ண என்ன காரணம்...? எது அவர்களை அரசியலிலிருந்து அந்நியப்படுத்தியது....?

அரசியல் என்பது தேர்தல் மட்டும் கிடையாது. அரசியல் விழிப்பு உணர்வு என்பது நல்விவாதங்களிலிருந்து தான் பிறக்கும். அத்தகைய விவாதங்கள் இன்று எத்தனை குடும்பத்தில் நடக்கின்றன. அதற்கு கல்வி நிலையங்கள் இடம் தருகிறதா...? இல்லைதானே... ஜவஹர்லால் பல்கலைக்கழகம் போன்ற சில கல்வி நிலையங்கள்தான் அதற்கு அனுமதி தருகிறது. அதனால்தான் அங்கு உள்ள மாணவர்கள் அரசியல் விழிப்பு உணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள். கல்வி நிலையங்கள் முதலில் மாணவர்களுக்கு விவாதிக்க இடம் தர வேண்டும். அவர்களுடன் விவாதிக்க வேண்டும். தேர்தல் அறிக்கைகளை படிக்க சொல்ல வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், இளைஞர்களை கிண்டல் மட்டும் செய்வது எந்த பயனையும் தராது.
அரசியல் தெரியாவிட்டாலும், உங்கள் வயதொத்த இளைஞர்கள் மத்தியில் மீண்டும் சாதிய உணர்வு தலை தூக்குகிறதே... அதை கவனிக்கிறீர்களா...?
அரசியல் தெரியாவிட்டாலும், உங்கள் வயதொத்த இளைஞர்கள் மத்தியில் மீண்டும் சாதிய உணர்வு தலை தூக்குகிறதே... அதை கவனிக்கிறீர்களா...?
ஆம். அதற்கும் அரசியல் தெரியாதது காரணம். அவர்கள் வெளி உலகத்தை பார்ப்பதை, இங்கு பெரும்பாலும் பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஒரு சிறுவட்டத்திலேயே வளர்வதாலும், அதனுடனேயே பழகுவதாலும் இளைஞர்கள் சாதிய சிந்தனையுடன் வளர நேர்கிறது. ஆனால், பெரும்பாலும் இளைஞர்கள் சாதிய சிந்தனைகள் அற்றவர்களாகவேதான் இருக்கிறார்கள்.
அடுத்து உங்கள் திட்டம் என்ன...? எது சம்பந்தமாக உங்கள் அடுத்த பாடல் இருக்கும்...?
அடுத்து உங்கள் திட்டம் என்ன...? எது சம்பந்தமாக உங்கள் அடுத்த பாடல் இருக்கும்...?
மீண்டும் சூழலியல் சம்பந்தமாகதான்... கொடைக்கானல் மக்களுக்கு ஓரளவு இழப்பீடு கிடைத்தாலும், இன்னும் மெர்க்குரியால் ஏற்பட்ட மாசு அப்படியேதான் இருக்கிறது. அது சம்பந்தமாகதான் என் அடுத்த பாடல்.
விளம்பர துறையில் பணியாற்றி இருக்கிறீர்கள். இசை, பாடல் அனுபவமும் இருக்கிறது. உங்களிடமிருந்து அடுத்து சினிமாவை எதிர்பார்க்கலாமா...?
விளம்பர துறையில் பணியாற்றி இருக்கிறீர்கள். இசை, பாடல் அனுபவமும் இருக்கிறது. உங்களிடமிருந்து அடுத்து சினிமாவை எதிர்பார்க்கலாமா...?
நிச்சயம் எதிர்பார்க்கலாம்... ஆனால், அது நீண்ட கால திட்டம். இந்த சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து என் படம் பேசும்.
சரி... எல்லாரையும் வாக்களிக்க சொல்கிறீர்கள். நீங்கள் வக்களிப்பீர்களா... உங்கள் வாக்கு எந்த தொகுதியில் இருக்கிறது...?
சரி... எல்லாரையும் வாக்களிக்க சொல்கிறீர்கள். நீங்கள் வக்களிப்பீர்களா... உங்கள் வாக்கு எந்த தொகுதியில் இருக்கிறது...?
நிச்சயம் வாக்களிப்பேன். என் வாக்கு வில்லிவாக்கம் தொகுதியில் இருக்கிறது. இப்போதே அங்கு நிற்கும் அனைத்து வேட்பாளர்களை பற்றியும் தேடித் தேடி படித்து வருகிறேன்... என் பாடலில் குறிப்பிட்டுள்ளது போல், தகுதியான வேட்பாளருக்கு நிச்சயம் வாக்களிப்பேன். இல்லையெனில் 'நோட்டா'விற்கு. ஆனால், நிச்சயம் வாக்களிப்பேன்.

No comments:
Post a Comment