வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடான பத்திரிகையாளர்கள் இறுதி சந்திப்பு நடந்தது. இதில் மிகவும் நகைச்சுவையாக தகவல்களை ஒபாமா பகிர்ந்து கொண்டுள்ளார்.
வழக்கம் போல் டொனால்டு ட்ரம்பை பற்றி பேசிய ஒபாமா, "அவருக்கு வெளிவிவகாரக் கொள்கைகள் பற்றி தெரியாது என்கிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மிஸ்.ஸ்வீடன், மிஸ். அர்ஜென்டினா என வெளிநாட்டவர்களுடன்தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.
அண்மையில் லண்டன் சென்றிருந்தபோது, இளவரசர் ஜார்ஜ் அரசு விதிமுறைகளை மீறி குளியலறை ஆடையுடன்தான் என்னைச் சந்தித்தார். அது என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. லண்டன் சென்றிருந்த போது மகாராணியுடன் உணவு உண்டேன், பிரதமருடன் விளையாடினேன். நான் கறுப்பினத்தவன் என்ற வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்" என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
கடைசியாக, 'ஒபாமா அவுட்' என்ற கூறியபடியே ஒபாமா வெளியேறினார். அப்போது, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

No comments:
Post a Comment