நிழல் என்ற வார்த்தையை கேட்கும் போதே மனம் குளிருகிறது. அந்த அளவுக்கு வெளியில் வெப்பம் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியில் சென்றால், ஒதுங்குவதற்கு கூட இன்று மரங்களும் அதன் நிழலும் இல்லாமல் போய் விட்டது. ஆனால் 'சேலமே குரல் கொடு' என்ற அமைப்பினர், இயற்கையை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு, இயற்கையை பாதுகாத்தும் வருகிறார்கள்.
இந்த அமைப்பை, 2010ல் வெறும் 10, 12 இளைஞர்களை வைத்து தொடங்கினார் பியூஸ் மானஸ். ஆனால் இன்று இந்த அமைப்பில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த அமைப்பின் மூலம், சேலம் கன்னங்குறிச்சியில் பாழடைந்து கிடந்த ஏரியை தத்தெடுத்து, தூர் வாரி இன்று தமிழகத்திலேயே மிக அழகிய ஏரியாக உருவாக்கி இருக்கிறார்கள்.
அதே போல அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி, அரிசிபாளையம் தெப்பக்குளம், பள்ளப்பட்டி தெப்பக்குளம், பள்ளப்பட்டி ஏரி என சேலத்தில் பல ஏரிகளை மீட்டு, இயற்கையை பேணி காத்து வருகிறார்கள். இதனால் மழைக் காலங்களில் மக்களை பேரழிவுகளில் இருந்தும், கோடை காலங்களில் வெயிலின் தவிப்பில் இருந்தும் ஒரு தனி அமைப்பாக காத்து வருகிறார்கள்.
இயற்கையை காக்க தவறும்போதுதான் உயிரினங்கள் அவதிப்படுகிறது. சென்னையில் இருக்கும் ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்றவற்றை அழித்து விலை நிலங்களாக மாற்றியதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்தனர். அப்போது இந்த அமைப்பினர் மூங்கில் படகுகள் செய்து அனுப்பியதில் பெரும் பங்கு வகித்தனர்.
அதேபோல தற்போது கோடை வெயில் 108 முதல் 110 வரை தமிழகத்தில் கொளுத்தி வருவதால், வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுப்பற்றி அரசும் கண்டுகொள்வதை போல தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்திலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் 'சேலமே குரல் கொடு' அமைப்பினர், 'வெப்பம் இங்கே... நிழல் எங்கே?' என்று எழுதி, மரம் வளர்ப்பு பற்றியும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுபற்றி 'சேலமே குரல் கொடு' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பியூஸ் மானஸ், ‘‘இந்த அமைப்பை 2010 ல் தொடங்கி, ஒரு தனி அமைப்பாக மரங்களையும், மலைகளையும், மதகு, ஏரி, குளம், குட்டைகளையும் இந்த அரசாங்கத்திடமிருந்தும், மக்களிடம் இருந்தும் காத்து வருகிறோம். சேலத்தில் எங்கள் அமைப்பின் மூலம் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட் மரங்களை வளர்த்து வருவதோடு ஏரி, குளங்களை தூர் வாரி பாதுகாத்து வருகிறோம்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் பெரு வெள்ளம் வந்து மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது. தற்போது கடும் வெயில் காரணமாக மக்கள் வெளியில் வர முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இயற்கையை அழிப்பதுதான். அதற்காக தொடர்ந்து பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தி, நீர்நிலைகளை மேம்படுத்துவதோடு, மரங்களை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் இந்த அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இதுபற்றி கண்டுகொள்வதே இல்லை. நீர்நிலைகளை பாதுகாத்து, பராமரித்து வந்திருந்தால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வந்த பெருவெள்ளத்தை அதில் சேமித்திருக்க முடியும். மேலும் வெயில் காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, பூமியின் வெப்பத்தையும் தணித்திருக்க முடியும். தற்போது 108 டிகிரி வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது. இதுபற்றி இன்னும் அரசு கண்டுகொள்ளவில்லை. இன்னும் 2, 3 டிகிரி அதிகமானால் உயிரினங்களை அழிவில் இருந்து காப்பது கடினம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டி வருகிறார்கள்.

அதை எதிர்த்து கடந்த 3 நாட்களாக சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பும், வனத்துறை அலுவலகத்திற்கு முன்பும், சேலம் நெடுஞ்சாலை அலுவலகத்திற்கு முன்பு, சேலம் 5 ரோட்டிலும் 'வெப்பம் இங்கே நிழல் எங்கே?' என்றும், 'வெப்பம் இங்கே, மரம் எங்கே?' என்று எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

No comments:
Post a Comment