Monetize Your Website or Blog

Tuesday, 17 May 2016

ஆர்.கே.நகரில் மறு தேர்தல் கேட்கிறார் வசந்தி தேவி!

தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

            


தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பளராக களம் காண்பவர் வசந்தி தேவி. இந்நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கையில் வைக்கப்படும் மை எளிதில் அழிவதாக புகார்கள் எழுந்தது. இதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் எளிதில் அழியாத வேறு மை பாட்டில்கள் வழங்கி வாக்குப்பதிவு தொடர்ந்தது.



இதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வசந்தி தேவி, வாக்காளர்கள் கை விரலில் எளிதில் அழியக் கூடிய மை வைக்கப்பட்டதால் பிரச்னை எழுந்தது. புகாருக்குப் பின் போலி மை பாட்டில்கள் அகற்றப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ மை வைக்கப்பட்டது. இதனால், இ.சி.ஐ. பள்ளி வாக்கு மையத்தில் உள்ள 11 சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக வசந்தி தேவி கூறும்போது, ''போலி அடையாள மைக்கு பதில் வேறு மை மாற்றியதாக தேர்தல் ஆணையர் லக்கானி கூறியதை ஏற்க முடியாது. போலி மை பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும். அ.தி.மு.க.வினரும், அதிகாரிகளும் சதி செய்து போலி அடையாள மையை பயன்படுத்தி உள்ளனர்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment