Monetize Your Website or Blog

Wednesday, 11 May 2016

விதவிதமான ரகங்கள், கூடுதல் மகசூல் கொடுக்கும் உதயம் வாழை!

வ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப்பகுதியில்வாழை சாகுபடிக்கான பட்டம்மண் வகைகளைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும்,சில வாழை ரகங்களைப் பற்றியும் பார்த்தோம்தொடர்ந்துவாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப்பகிர்ந்து கொள்கின்றனர்திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் எம்.எம்.முஸ்தபா மற்றும் முதன்மை விஞ்ஞானி எஸ்உமா.





 களர்உவர் நிலத்துக்கு ஏற்ற கற்பூரவல்லி!
களர்உவர் மண் வகைகளிலும்வறட்சியிலும் தாங்கி வளரக்கூடியதுகற்பூரவல்லி ரகம்மரங்கள்தடித்து வளர்வதுடன்உயரமாகவும்பெரிய இலைகளுடனும் காணப்படும்பழங்கள் நடுத்தரஅளவுடன்பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக இருக்கும்தோல்மிதமானகெட்டித்தன்மையுடன்சாம்பல் பூச்சுடன் காணப்படும்சதைப்பகுதிசுவையுடன் சாறு மிகுந்து திடமாக,நறுமணத்துடன் காணப்படும்தார்கள் உருளை வடிவில் இருப்பதால்நெடுந்தூரப் பயணங்களுக்குஏற்றவைஜூஸ்உலர்பழங்கள்வாழைப்பூ சட்னி என தயாரிக்கலாம்இலை பயன்பாட்டுக்கும் இந்தரகம் பயிரிடப் படுகிறதுஇதன் வயது, 14 முதல் 16 மாதங்கள்ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12சீப்புகளுடன், 180 முதல் 200 பழங்கள் வரை இருக்கும்ஒவ்வொரு தாரும் 25 முதல் 28 கிலோ வரைஎடை இருக்கும்இந்த ரகத்தில் 'பனாமா வாடல்நோய்’ தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.ஆகையால்இந்த நோய் தாக்குதல் இல்லாத மரங்களில் இருந்துகன்றுகளைத் தேர்வு செய்து நடவுசெய்ய வேண்டும்.

காற்றில் சாயாத உதயம்!
திருச்சிதேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 2005ம் ஆண்டு, 'உதயம் வாழை’ ரகம்வெளியிடப்பட்டதுகற்பூர வல்லியைப் போன்ற குணாதிசயம் கொண்ட ரகம் இதுஆனால்,கற்பூரவல்லியைவிட 40 சதவிகிதம் கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடியதுதார்உருளையாகஇருப்பதால்நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றதுஇதன் பழங்களில் இருந்துஜூஸ்ஜாம்,உலர்பழங்கள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்மரங்கள் உறுதியான தண்டுடன்உயரமாக இருக்கும்.ஒவ்வொரு தாரிலும் 18 முதல் 20 சீப்புகளுடன், 250 முதல் 300 பழங்கள் வரை இருக்கும்இந்த ரகத்தில்ஒவ்வொரு தாரும் 35 முதல் 40 கிலோ எடை வரை இருக்கும்நன்றாக பராமரிப்பு செய்யும்பட்சத்தில், 50 கிலோ வரை எடை  இருக்கும்பழுக்க ஆரம்பித்ததில் இருந்துஅதிகபட்சம் 7 நாட்கள் வரை மஞ்சள்நிறத்திலேயே இருக்கும்காற்று அதிகம் வீசும் பகுதிகளில்பயிரிட ஏற்ற ரகமிதுவாழை முடிக்கொத்துநோயைஎதிர்த்து வளரும் சக்தி கொண்டதுஇந்த ரக வாழையும் களர் மற்றும் உவர் தன்மையைத்தாங்கி வளரும் தன்மை கொண்டவை.

 ஊடுபயிருக்கு ஏற்ற பச்சநாடன்!
தமிழ்நாடுகர்நாடகாகேரளா ஆகிய மாநிலங்களில் பச்சநாடன் வாழை ரகம் பயிரிடப்படுகிறது.தென்னைபாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக பயிரிட ஏற்றதுமலைப்பிரதேசங்களில் இதை 'லாடன்என்றும்சமவெளிப் பகுதிகளில் 'நாடன்’ என்றும் அழைக்கின்றனர்கற்பூரவல்லிரஸ்தாளிநேந்திரன்மாதிரியான நீண்டகால வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்களில் கன்றுகள்அழுகிப்போனாலோ அல்லது காய்ந்து போனாலோ இடைவெளிப் பகுதியில் இவற்றை நடவு செய்தால்,அந்த வாழை ரகங்களுடன் இந்த வாழை ரகமும் அறுவடைக்கு வந்துவிடும்இதனாலேயே இந்தவாழை ரகத்தை 'காலி வாழை’ என்றும் விவசாயிகள் அழைக்கிறார்கள்இருமண் பாங்கான நிலம்,களிமண் மற்றும் கரிசல் மண் ஆகியவற்றில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டதுஇதுஇந்த ரகத்தின்வயது 11 முதல் 12 மாதங்களாக இருந்தாலும், 8ம் மாதத்திலே குலை தள்ளிவிடும்ஒவ்வொருதாரிலும், 7 முதல் 8 சீப்புகளுடன், 100 முதல் 120 பழங்கள் வரை இருக்கும்தாரின் எடை 10 முதல் 15கிலோஇந்த ரகத்தில்மூளை வளர்ச்சிக்குத் தேவையான மாங்கனீசுரத்தத்தில் ஹீமோகுளோபின்அளவு அதிகப்படுத்தும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளனஇந்த ரகத்தைவாடல் நோய் தாக்கும்வாய்ப்பு உண்டு.


 வறட்சியைத் தாங்கும் நெய் பூவன்!
கிராண்ட்9 (ஜி9) வாழை ரகத்துக்கு அடுத்தப்படியான ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம்நெய் பூவன். 'ஏழரசி,ஞானிபூவன்ஏலக்கி பாலேபுட்டபாலே’ என்ற பல பெயர்கள் இருந்தாலும்பெரும்பாலும் 'நெய் பூவன்என்றே அழைக்கிறார்கள்இந்த ரகம் தமிழ்நாடுகர்நாடகாகேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமானஅளவில் பயிரிடப்படுகிறதுஎல்லா வகை மண்ணிலும் நன்றாக வளர்வதுடன்வறட்சியைத் தாங்கியும்வளரும்கர்நாடகா மற்றும் கேரளாவில் பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக இ்்தை பயிரிடுகிறார்கள்.இதன் வயது 13 முதல் 14 மாதங்கள்ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150பழங்கள் வரை இருக்கும்ஒவ்வொரு தாரும் 15 முதல் 18 கிலோ எடை வரை இருக்கும்பழங்கள் அதிகசுவையுடன் இருந்தாலும்காய்கள் கனிவதற்கு 5 முதல் 6 நாட்கள் ஆகும் என்பதால்நன்கு பழுத்தபழங்கள் கூட எளிதில் உதிர்வதில்லைஇந்த ரக வாழையில் வாடல் நோய்நூற்புழு போன்றவைதாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளனஆகையால்கன்று தேர்வு செய்யும்போது நோய் தாக்காதகன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

 காய்க்கும்பழத்துக்கும் மவுசு உள்ள நேந்திரன்!
காய்க்காகவும்பழத்துக்காகவும் இந்த வாழை ரகம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது.இதற்கு ஏத்தன்மலையேத்தன்சிப்ஸ்காய்வறுவல்காய்நெடுநேந்திரன்ஆட்டுநேந்திரன் என வேறுபெயர்களும் உண்டு.  இந்த ரகம்  பெருமளவு சிப்ஸ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டாலும்கேரளாவில்பழமாகவும் சாப்பிடுகிறார்கள்ஓணம் போன்ற பண்டிகைக் காலங்களில் அதிகமாக விற்பனைசெய்யப்படுகிறதுபழங்களின் தோல் சற்று தடிமனாக இருப்பதுடன்இனிப்புச் சுவை அதிகமாகஇருக்கும்பழங்களில் வைட்டமின்ஏ வும் (ஒரு கிராமில் 750 முதல் 800 மைக்ரோ கிராம்), எலும்புமற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும் சுண்ணாம்புச் சத்துக்களும் (ஒரு கிராம் பழத்தில் 14 மில்லிகிராம்நிறைந்துள்ளன.

இந்த ரகத்தின் வயது 11 முதல் 12  மாதங்கள்தமிழ்நாட்டில் மாசிப்பட்டத்தில் நடவு செய்யலாம்இந்தரகத்தில் மறுதாம்பு விடுவதில்லைஅதிகமான காரத்தன்மை கொண்ட நிலங்களில்இந்த ரகம் சரியாகவளராதுஒவ்வொரு பழமும் 20 முதல் 25 சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கும்ஒவ்வொரு தாரும் 5முதல் 6 சீப்புகளுடன், 40 முதல் 50 பழங்களுடன் இருக்கும்ஒவ்வொரு தாரும் 10 முதல் 12 கிலோஎடை இருக்கும்இந்த ரகத்தில்  நூற்புழுகிழங்கு கூன்வண்டு  மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல்அதிகமாக இருக்கும்இவற்றின் தாக்குதலைக் குறைக்க... பூச்சித் தாக்குதல் இல்லாத கிழங்குகளைத்தேர்வு செய்துநடவு செய்ய வேண்டும்.  



No comments:

Post a Comment