Monetize Your Website or Blog

Tuesday, 3 May 2016

தொகுதி மாறுனது ஒரு குத்தமா? கலங்கும் கேப்டன்


உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.


கடந்த 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் தொகுதி மாறிய விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் மீண்டும் தொகுதி மாறியுள்ளார் விஜயகாந்த். இந்த முறை உளுந்தூர்பேட்டை தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

தோல்வி பயம் காரணமாகவே விஜயகாந்த் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் தொகுதி மாறி போட்டியிடுவதாக பாமக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறிவருவதோடு, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விஜயகாந்த் அந்த தொகுதியில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், சுதீஷ், கடந்த இரண்டு வாரங்களாக உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இளைஞர்களை அதிகமாக சந்தித்து வரும் அவரிடம், வைக்கப்படும் கேள்வி, விஜயகாந்த் ஏன் தொகுதி மாறி போட்டியிடுகிறார் என்றும், தோல்வி பயம் காரணமா என்றும் கேட்கிறார்களாம். இதற்கு சுதீசால் பதில் அளிக்க முடியவில்லையாம்.

இந்த சூழ்நிலையில், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் நேற்று மாலை திறந்த வேனில் நின்றபடி விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, உளுந்தூர்பேட்டை தொகுதியில் ஏன் போட்டியிடுகிறேன் என்று விளக்கம் அளித்தார்.
அவர் பேசுகையில், விஜயகாந்த் ஏற்கனவே வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் போட்டியிடுவாரா? அல்லது ரிஷிவந்தியத்தில் போட்டியிடுவாரா? என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். எனக்கு அதிக குக்கிராமங்கள் உள்ள தொகுதிதான் மிகவும் பிடிக்கும். அதனால்தான் உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தேன். விவசாயத்தையும், நெசவையும் முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே என் ஆசை. முதலில் இங்கு அரசு கலைக்கல்லூரி, நவீன அரசு மருத்துவமனை கட்டுவதே எனது லட்சியம்.

ரிஷிவந்தியம் தொகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை, அ.தி.மு.க., தி.மு.க. அரசு செய்ய முடியாததை நான் செய்திருக்கிறேன். அந்த பாலத்தை கட்டுவதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.20 கோடி நிதி பெற்றுள்ளேன். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. என்னை வெற்றிபெற செய்தால் பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்துவேன். அனைத்து குழந்தைகளையும் படிக்க வைப்பேன். பள்ளிகளில் காலை, மாலை என இருவேளையும் உணவு வழங்கப்படும். படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை கொடுப்பேன்.

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். தி.மு.க.வினர் அ.தி.மு.க.வையும், அ.தி.மு.க. வினர் தி.மு.க.வையும் குறை கூறுவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனது தலைமையிலான ஆட்சி அமைந்ததும், இவை அனைத்தும் மாறும். தமிழகம் வளர்ச்சி பெறும்" என்று பேசினார்.



No comments:

Post a Comment