Monetize Your Website or Blog

Tuesday, 3 May 2016

'விஜயகாந்தின் பலத்தை மே 19-ல் கருணாநிதி உணர்வார்!' -பிரேமலதா

விஜயகாந்தின் பலம் மே 19-ல் கருணாநிதியின் கண்ணுக்கு புலப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா கூறினார்.

தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. கூட்டணி  வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டபோது, ''தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. மூன்றாவது அணி அல்ல. மக்கள் ஏற்றுக் கொண்ட முதல் அணியாகும். தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரத்தில் பேசும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரணி தெரியவில்லை எனக் கூறி இருக்கிறார்.


தி.மு.க. கூட்டணிக்குப் போகாததால் அவரது கண்ணுக்கு தெரியவில்லை. பழம் நழுவி பாலில் விழும் எனக் கூறும்போது அவருக்கு விஜயகாந்தின் பலம் தெரியவில்லையா? கலைஞர் அவர்களே நீங்கள் வயதில் முதிர்ந்தவர் அதனால் உங்களுக்கு நான் பதில் சொல்லமாட்டேன். உங்கள் வயதுக்கு என்றைக்குமே மரியாதை வைத்திருக்கிறோம். அதனால் உங்களுக்கு சொல்கிறேன். நிச்சயமாக உங்களது கண்ணுக்கு விஜயகாந்த் பலம் புலப்படும். எப்போது, மே 19-ம் தேதி தேர்தல் முடிவு வரும்போது, இந்த அணி இவ்வளவு பெரிய அணியா. ஆட்சியில் அமர்ந்திருக்கிறதே என்று அன்றைக்கு உங்கள் கண்ணுக்கு மிக பிரைட்டாக விஜயகாந்தின் பலம் தெரியும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு 34 அரசுத் துறைகளில் கொண்டு வரப்படும். அரசுப் பள்ளிகளில் காலை உணவு, விவசாயிகள், நெசவாளர்களுக்கு சலுகைகள், தமிழகத்தில் நதிகள் இணைத்து பொருளாதாரம் மேம்படுத்தப்படும். ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும். டாஸ்மாக் கடைகள் படிப்படியாக அகற்றி டாஸ்மாக் இல்லாத நிலையை உருவாக்குவோம்.

நதிகளை இணைத்து விவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு, எந்த துறையிலும் லஞ்சம் முற்றிலும் இல்லாத நேர்மையான நிர்வாகம் தே.மு.தி.க. ஆட்சியில் நிறைவேற்றப்படும். தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஓமலூர் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு இணையாக மாற்றப்படும்.


சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சுங்கச் சாவடியை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை, ஓமலூர் மின் மயானம், காடையாம்பட்டியில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிழக்கு சரபங்கா, மேற்கு சரபங்கா நதியில் தடுப்பணைகள், கருப்பூரில் விவசாயிகள் விற்பனை மையம், அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம், அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை வெறும் 5 ஆண்டுகளில் விஜயகாந்த் ஏற்படுத்தித் தருவார்.

மின்சாரப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சர்களை சந்திக்கக்கூட ஜெயலலிதா மறுக்கிறார். தடையற்ற மின்சாரத்தை கொடுக்கும் திட்டத்தை அவர் அனுமதிக்கவில்லை. தொடர்ச்சியான பொய்யான வாக்குறுதிகளை ஜெயலலிதா சொல்கிறார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நான் எங்கு சென்றாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பின்னாடியே வருகிறார். நாங்கள் சொல்லும் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து சொல்கிறார். மலிவான அரசியலை கைவிட்டு, ஸ்டாலின் நேர்மையான அரசியலைத் தர வேண்டும்.

அதனால், இந்த தேர்தலில் தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர நீங்கள் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.



No comments:

Post a Comment