Monetize Your Website or Blog

Thursday, 12 May 2016

உடுமலை கௌசல்யா தற்கொலை முயற்சி:அதிர்ச்சித் தகவல்கள்


 
உடுமலையில் கௌரவ கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தைச்  சேர்ந்த கல்லூரி மாணவர் சங்கர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்  சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து கௌசல்யாவின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அவர்களைப் பிரிக்கவும் முயற்சி செய்தனர்.அது தோல்வியில் முடிந்தது.இந்நிலையில்,,கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி உடுமலையில், சங்கரும் அவரின் மனைவி கௌசல்யாவும் சிலரால் வெட்டப்பட்டனர்.அதில், பலத்த காயம் அடைந்த அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.ஆனால்  அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக பலியானார்.


அதனைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் விசாரணையில் சங்கரை கௌசல்யாவின்  பெற்றோர் மற்றும் சிலர் சேர்ந்து கௌரவ கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தின. தனது காதல் கணவர் சங்கரை பெற்றோர் ஆள் வைத்து கொலை செய்தது பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த கௌசல்யா அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்ற கௌசல்யா தனது கணவர் சங்கரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சங்கரின் பெற்றோருடன் வசித்து வந்த கௌசல்யா நேற்று(புதன் கிழமை)இரவு 8 மணியளவில் திடீரென விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கௌசல்யா ஏன் விஷம் குடித்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


No comments:

Post a Comment