Monetize Your Website or Blog

Monday, 23 May 2016

விஜயகாந்த், அன்புமணி தோல்விகளுக்கு தமிழிசை சொல்லும் காரணம்!

சுயநல அரசியலால் விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் தோல்வி அடைந்து இருக்கிறார்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தலைவிட தற்போது வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும். எங்களை பொறுத்தவரை 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்ததால், பலர் வாக்களிக்காமல் வெளியூர்களுக்கு சென்று விட்டனர் என்றே கருதுகிறோம்.



  

தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஆனால், பா.ஜ.க. அதையும் மீறி தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறது. திராவிட கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கியது. பல இடங்களில் 2-வது இடமும், 3-வது இடமும் பெற்றிருக்கிறோம்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறப்பட்டது. அதற்காக 5 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளாமல் 3 மாதத்திற்குள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்'' என்றார்.

அப்போது முதலமைச்சர் வேட்பாளர்கள் என்று கூறி தேர்தலை சந்தித்த விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் தோல்வியடைந்து இருக்கிறார்களே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''சுயநல அரசியலால் விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். முதலமைச்சராக வேண்டும் என விரும்பியவர்கள் எம்.எல்.ஏ.வாக கூட வெற்றி பெறவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போன்று, தற்போதும் அவர்கள் எங்களுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும்'' என்றார்.



No comments:

Post a Comment