Monetize Your Website or Blog

Monday, 23 May 2016

தி.மு.கவின் 1 ராஜ்ய சபா சீட்டை குறைக்க பாஜக செக் வைக்கிறதா..?

மிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் எதிரொலியாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் நடக்கவிருந்த தேர்தலை ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், மீதமிருந்த 232 தொகுதிகளுக்கும் கடந்த 16-ம் தேதி தேர்தலை நடத்தியது.

19-ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அ.தி.மு.க.வுக்கு 134 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 98 இடங்களும் கிடைத்தன. இதன் மூலம்  அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. 



இந்நிலையில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு உடனே தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து மே 23-ம் தேதி இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தலை  நடத்த இருப்பதாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், நேற்று (21-ம் தேதி) மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் தாக்கல் செய்த மனுவில், "அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதை மேலும் 3 வார காலத்துக்கு ஆணையம் தள்ளி வைத்துள்ளது.

இந்த தொகுதிகளில் நிலவும் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. அதேபோல் வேட்பாளர்களின் சூழ்நிலை குறித்தும், அவர்களது கருத்துகளை அறிந்த பின்னரும் உரிய முடிவினை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்" என்று  சொல்லியிருந்தார்.

ஆணையத்தின் இந்த பதிலை, நீதிமன்றம் பதிவு செய்து கொண்டதையடுத்து, வழக்கு விசாரணையை கோடை விடுமுறை காலத்துக்குப் பின்னர் தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று (20-ம் தேதி) அளித்த பேட்டியில், "அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக் கூடாது என பா.ஜ.க.வும், பா.ம.க.வும் தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலும் கேட்டுக் கொண்டதால், தேர்தல் தேதியை 3 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக கூறியுள்ளனர். இது தி.மு.க.வுக்கு எதிராக செய்யப்படும் மாபெரும் சூழ்ச்சி" என்றார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "பா.ம.க.வும், பா.ஜ.க.வும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர், அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் இப்படி ஒரு முடிவை எடுப்பதாக, தேர்தல் ஆணையம் காரணம் காட்டுகிறதே, தி.மு.க.வின் கருத்தை இதில் ஏன் கேட்கவில்லை?" என்றார்.

'கருணாநிதியின் கோபத்துக்கு என்ன காரணம்? தஞ்சை அரவக்குறிச்சியில் உடனே தேர்தலை நடத்தாவிட்டால் நானே  களத்தில் இறங்கி போராடுவேன் என்று சொல்லும் அளவுக்கு இதன் பின்னணியில் இருப்பது என்ன?' என தி.மு.க ஏரியாவில் விசாரித்தேன்.

"இப்போதுள்ள சூழ்லையில் தேர்தலை நடத்தினால், ஆட்சி அமைத்த உடனேயே ஆளுங்கட்சி தன்னுடைய 'திறமை'யை இந்த இரண்டு தொகுதிகளிலும் காட்டி எடுத்த எடுப்பிலேயே மக்களிடம்  கெட்ட பெயரை வாங்க நினைக்காது.

அதேபோல் தேர்தல் அதிகாரிகளாக, யாரை அங்கே போட்டால், ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்பதையெல்லாம் இப்படி குறைந்த நாட்களில் முடிவு செய்து காரியமாற்ற முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.

மேலும் 170 தொகுதிகளில் நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதிய தி.மு.க 89 தொகுதிகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க 81 தொகுதிகளை மட்டுமே வென்றிருக்கிறது. இப்போது அந்த 2 தொகுதிகளுக்கும் உடனே தேர்தல் நடந்தால் அ.தி.மு.கவால் வெற்றி பெற முடியாது. 

அ.தி.மு.க, காங்கிரசின் 41 தொகுதிகளில் மோதி, 33 தொகுதிகளை பிடித்துள்ளது. காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி 8 தொகுதிகளில் மட்டும்தான். நேரடியாக தி.மு.க.வுடன் மோதி வெற்றிகளாய் தொடர்ந்து குவித்து வந்த கட்சி அ.தி.மு.க. ஆனால் இந்த முறை , காங்கிரசை மட்டும்தான் வெல்ல முடியும், தி.மு.க.வை வெல்ல முடியாது என்று நிலைமை மாறியுள்ளது. அதேபோன்று அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதமானது 40.8%. தி.மு.க பெற்றிருப்பதோ 39.8%. ஆக, தி.மு.க.வைவிட 1.1% சதவீதமே கூடுதலாய் வாக்குகள் பெற்று அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்திருக்கிறது.



தமிழகத்தின் 6 எண்ணிக்கையிலான ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவி அடுத்த மாதம் முடிவடைகிறது. அந்த இடத்துக்கு தி.மு.க சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை தி.மு.க அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கைவசம் இருந்தால் தகுதி அடிப்படையில் மூன்று எம்.பி.க்களாக பெறமுடியும்.

கூட்டணி தர்மப்படி, தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு அந்த எம்.பி.பதவியை தி.மு.க விட்டுத் தருகிற முடிவில் இருந்ததை அறிந்து கொண்ட பா.ஜ.க.தான்,  அதற்கு 'செக்' வைக்கும் விதமாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளது.

ஏதோ நியாயத்துக்காக உண்மையாகவே போராடுவது போல ஒரு மனுவைக் கொடுத்து விட்டு,  அ.தி.மு.க.வுக்கு சாதகமாக  வேலை பார்த்துள்ளது. இதற்கு பா.ம.க உள்ளிட்ட சில தமிழக கட்சிகளும், தேர்தல் ஆணையமும் துணை போயுள்ளன. இதை எந்த நோக்கத்துடன் எதிர்தரப்பு கையில் எடுத்துள்ளது என்பதை கருணாநிதி அறிந்துள்ளதால்தான் இதை கண்டித்து நானே களத்தில் இறங்குவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்" என்றனர்.



பரபரப்பான இந்த சூழ்நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு உடனடி தேர்தல் கோரி, தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் ''தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்த தி.மு.க. உள்ளிட்ட அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் 27-ம் தேதிக்குள் பரிசீலிக்குமாறு தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப்போகிறதோ...?

No comments:

Post a Comment