Monetize Your Website or Blog

Monday, 23 May 2016

ஜெ. பதவியேற்பு... தி.மு.க., பா.ஜ.க.வுக்கு அழைப்பு; காங்கிரசுக்கு இல்லை!

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தி.மு.க., பா.ஜ.க தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது, இதையடுத்து, நாளை (23-ம் தேதி) 6-வது முறையாக தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.



   


இந்த விழாவில் கலந்து கொள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அதிகாரிகள் மூலம் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



மேலும், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்பட பல்வேறு தேசிய தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.



ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு ராஜ்யசபாவில் ஆதரவு தர ஜெயலலிதா தயாராக இருப்பதாகவும், அதேநேரத்தில் காங்கிரசுக்கு எதிரான தனது நிலைபாட்டை தெரிவிப்பதற்காக அழைப்பு விடுக்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



No comments:

Post a Comment