Monetize Your Website or Blog

Saturday, 13 August 2016

முப்பதாண்டு கோரிக்கைகளை முடித்து வைத்த வானதி! -மத்திய அமைச்சர்கள் சந்திப்பு பின்னணி


த்திய அமைச்சர்களை நேரடியாக சந்தித்து, கோவை மக்களின் நீண்டகால கோரிக்கைளுக்கு நிவாரணம் பெற்றுத் தந்திருக்கிறார் வானதி சீனிவாசன். ' பருத்தி விலை நிர்ணயம், பஞ்சாலை தொழில்கள் மேம்பாடு, ரயில் போக்குவரத்து என நாங்கள் முன்வைத்த கோரிக்கைளுக்கு எளிதில் நிவாரணம் கிடைத்துவிட்டன' என்கிறார் அவர்.

சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன். தேர்தலின்போது, ' தொழில்துறையினரின் பிரச்னைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்பேன்; பருத்தி விலையைக் குறைப்பேன்' எனக் கூறி வாக்கு சேகரித்தார்

. தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லையென்றாலும், வாக்குறுதிகளை நிறைவேற்றக் களம் இறங்கினார். கடந்த 9-ம் தேதி மூன்று மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்திருக்கிறார். வானதி சீனிவாசனிடம் பேசினோம். " கோவை மாநகரத்தில் இருந்து பெங்களூரு சென்று ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேர ரயில்கள் இயக்கப்படுவதில்லை. தவிர, தொழில்துறையினரின் போக்குவரத்துக்காக, பெங்களூருவுக்கு இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அதேபோல், போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரயில் பாதைகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன்.


 
மனுவைப் படித்துப் பார்த்த ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ' மூன்றே மாதத்தில் இரவு நேரப் பயணத்திற்கென்று தனி ரயில் விடுகிறேன். அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் போத்தனூர் அகல ரயில் பாதைகள் பணி முடிக்கப்படும்' என உறுதியளித்தார். பெங்களூருவுக்குத் தனி ரயில் கோரிக்கை இவ்வளவு எளிதாக நிறைவேறும் என்று நாங்கள் நினைக்கவில்லை" என நெகிழ்ந்தவர், " இதையடுத்து, வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். ' திருச்சி-திண்டுக்கல் பகுதியில் கடுக்காயைப் பயன்படுத்தி, இயற்கை முறையில் தோல் பதனிடும் தொழிலைச் செய்பவர்கள் ஏராளம். இதை நம்பி நேரடியாக ஐந்தாயிரம் குடும்பங்கள் உள்ளனர். சுற்றுச்சூழலைக் கெடுக்காத இந்தமுறைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளன. ஆனால், அதற்கான ஏற்றுமதிகளில் நிறைய கெடுபிடிகள் உள்ளன' என அமைச்சரிடம் தெரிவித்தோம். 'உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்' என உறுதியளித்தார். இதுதொடர்பாக, ' நிதித்துறை அமைச்சகத்தில் பேசுவதாக'வும் நம்பிக்கை அளித்தார்.

இறுதியாக, ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்தோம். அவரிடம், ' இந்திய பருத்திக் கழகம் மூலம் வழங்கப்படும் பருத்தியானது, சிறு குறு பஞ்சாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் தொழில்கள் நசிந்து வருகின்றன' எனக் குறிப்பிட்டிருந்தோம். ' இனி வரும் காலங்களில் சிறு குறு பஞ்சாலைகளுக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்' என உத்தரவிட்டார். இதற்கு என்னுடன் வந்திருந்த தொழில்துறையினர் நன்றி தெரிவித்தனர். உலக அளவில் திருப்பூரில் இருந்து அதிகளவில் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ' இதற்கென தனியாக பின்னலாடை வாரியம் அமைக்கப்பட வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்தோம். 'விரைவில் நிறைவேற்றுவதாக' உறுதியளித்தார் அமைச்சர்.


அதேபோல், ' பருத்தி விலை உயர்வால் பஞ்சாலைத் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது' என விவரித்தோம். அதற்கு அமைச்சர், ' செயற்கைக்கோள் மூலம் பருத்தி உற்பத்தியைக் கண்டறிந்து, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறேன்' என உறுதியளித்தார். கூடவே, ' கைத்தறி ஆடைகளுக்கு என பிரமாண்ட கண்காட்சியை விரைவில் நடத்த வேண்டும்' எனவும் தெரிவித்தோம். ' இரண்டே மாதத்தில் கண்காட்சியை நடத்துவோம்' என மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தார் அமைச்சர். முப்பதாண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருந்த சில கோரிக்கைகளுக்கு, மத்திய அமைச்சகம் விரைந்து செயலாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றிய திருப்தியோடு தமிழ்நாடு திரும்பினோம்" என்றார் நெகிழ்ச்சியோடு.




No comments:

Post a Comment