கலைஞர் விருதுக்கு தேர்வு செய்தமைக்காக, இன்று கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி. ' மாவட்ட அரசியலில் பெரியசாமியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கே விருது கொடுக்கிறார் கலைஞர்' என்கின்றனர் உடன்பிறப்புகள்.
தி.மு.க சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, வருகிற செப்டம்பர் 17-ம் தேதியன்று அறிவாலயத்தில் விழா நடக்க உள்ளது. விழாவில், பெரியார் விருதுக்கு பேராசிரியர் அ.அய்யாசாமியும், அண்ணா விருதுக்கு விஜயா தாயன்பனும், பாவேந்தர் விருதுக்கு திண்டுக்கல் ஐ.லியோனியும், கலைஞர் விருதுக்கு தூத்துக்குடி என்.பெரியசாமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைஞர் விருதுக்கு பெரியசாமி தேர்வு செய்யப்பட்டதை, அவரது எதிர்ப்பாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ' சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பெரியசாமியே காரணம். அவரது மகள் கீதாஜீவன் வெற்றி பெறுவதை மட்டுமே அவர் விரும்பினார்' என அறிவாலயத்திற்குப் புகார்களைத் தட்டிவிட்டனர்.
தி.மு.க சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, வருகிற செப்டம்பர் 17-ம் தேதியன்று அறிவாலயத்தில் விழா நடக்க உள்ளது. விழாவில், பெரியார் விருதுக்கு பேராசிரியர் அ.அய்யாசாமியும், அண்ணா விருதுக்கு விஜயா தாயன்பனும், பாவேந்தர் விருதுக்கு திண்டுக்கல் ஐ.லியோனியும், கலைஞர் விருதுக்கு தூத்துக்குடி என்.பெரியசாமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைஞர் விருதுக்கு பெரியசாமி தேர்வு செய்யப்பட்டதை, அவரது எதிர்ப்பாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ' சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பெரியசாமியே காரணம். அவரது மகள் கீதாஜீவன் வெற்றி பெறுவதை மட்டுமே அவர் விரும்பினார்' என அறிவாலயத்திற்குப் புகார்களைத் தட்டிவிட்டனர்.
' பெரியசாமியின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடுங்க வேண்டும்' என அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் உள்ளிட்டவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர். இதையொட்டி, பெரியசாமியை புறக்கணித்துவிட்டு கட்சிக் கூட்டங்களையும் நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் பல துண்டுகளாக சிதறிக் கொண்டு அரசியல் செய்வதை கலைஞர் ஏற்கவில்லை என்பதை உணர்த்தவே, அவர் பெயரிலான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார் பெரியசாமி" என நம்மிடம் விளக்கினார் அறிவாலய நிர்வாகி ஒருவர். தொடர்ந்து,
" சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாவட்டச் செயலாளருக்கு மூன்று தொகுதிகள் வீதம் ஒதுக்கப்பட்டன. இதில், ' இரண்டு தொகுதிகள் வரையில் வெற்றியைத் தேடித் தந்தால் மா.செ பதவி நிச்சயம் என தேர்தலுக்கு முன்பே தலைமை அறிவுறுத்தியிருந்தது. அந்தவகையில், பெரியசாமியின் தீவிர ஆதரவாளரான வடக்கு மா.செ ராஜாராமுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதியிலும் தி.மு.க வெற்றிபெறவில்லை. அவர் மீதான விசாரணைக்குப் பின் மா.செ பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம் பெரியசாமிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அனிதாவும், கீதாஜீவனும் வெற்றி பெற்றனர். எனவே, அவருடைய பதவி தப்பியது. குறிப்பாக அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதைப் பற்றிப் பேசிய ஸ்டாலின், 'பெரியசாமியைத் தாண்டி அனிதா வெற்றி பெற்றுவிட்டாரே' என ஆச்சர்யமாகக் கேட்க, அதற்கு பதில் அளித்த கழக நிர்வாகி ஒருவர், ' கட்சி மாறாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்திருந்தால், பெரியசாமிக்கு எதிரான சக்தியாக அனிதா வளர்ந்திருப்பார். அவர் அ.தி.மு.கவுக்குப் போனதும் ஒன்றிய, நகர நிர்வாகிகளை தன்பக்கம் வைத்துக் கொண்டார் பெரியசாமி. அதனால்தான் அனிதாவால் கட்சி நிர்வாகிகளை வளைக்க முடியவில்லை. தனிப்பட்ட செல்வாக்கால்தான் அவர் வெற்றி பெற்றார்' என விளக்கியிருக்கிறார்.' தேர்தலுக்குப் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில், தான் புறக்கணிக்கப்படுவது' குறித்து, கலைஞரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் பெரியசாமி. ' இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' என திருப்பி அனுப்பினார் கலைஞர். உள்ளூர் அரசியலில் பெரியசாமிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டுவதை அறிந்துதான், ' இருக்கும் மாவட்டச் செயலாளர்களிலேயே மிகவும் சீனியர் பெரியசாமி. சிரமமான நேரங்களில் எல்லாம் கட்சியை வளர்க்கப் பாடுபட்டவர். 35 வருடங்களாக பதவியில் நீடிக்கிறார். என் பெயரிலான விருதை அவருக்கே கொடுங்கள். அவர் பக்கம் நான் இருக்கிறேன் என தொண்டர்கள் உணர்ந்து கொள்ளட்டும்' என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்தார்" என்றார் விரிவாக.
" விருது கொடுப்பதன் நோக்கமே, அங்கீகாரம் கொடுத்துவிட்டு ஒதுக்கி வைக்கத்தான். ' தன் குடும்பம் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும்' என நினைத்ததன் விளைவுதான், தூத்துக்குடியில் கட்சி பின்தங்கிப் போனதற்குக் காரணம். சில நாட்களுக்கு முன்பு கனிமொழியை சந்தித்து நிலைமையை விளக்கினார் கீதா ஜீவன். ' நான் எதிலும் தலையிட மாட்டேன்' என ஒதுங்கிக் கொண்டார் கனிமொழி. இன்னும் பழைய அரசியலையே பேசிக் கொண்டிருந்தால், கட்சியை வளர்ப்பது சிரமம். எங்கள் பின்னால் தளபதி இருக்கிறார்" என்கின்றனர் பெரியசாமி எதிர்ப்பு அணியினர்.

No comments:
Post a Comment