பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மீது எழும் தொடர்ச்சியான பாலியல் குற்றச்சாட்டுக்களால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் கல்வியாளர்கள். ' பேராசிரியர் ஒருவரின் அத்துமீறலை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை' எனவும் கொந்தளிக்கின்றனர் மாணவர்கள்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது பாண்டிச்சேரி பல்கலைக்கழகம். ஆராய்ச்சிப் படிப்பில் பயிலும் மாணவிகளிடம் பேராசிரியர் ஒருவர், தவறான முறையில் நடந்து கொள்வதாக 2013-ம் ஆண்டு சர்ச்சை எழுந்தது. இதைப் பற்றி முறையாக விசாரிக்காத, பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிகளையே சஸ்பெண்ட் செய்தது. இதனை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கில், புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தின் போக்கை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது. அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நாற்பதாயிரம் ரூபாய் அபராதம் வழங்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆராய்ச்சிப் பிரிவு மாணவி ஒருவர் உடற்கல்வி பேராசிரியர் ஒருவர் மீது பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பாலியல் குற்றச்சாட்டு புகார் கூறியுள்ளார். " இந்தப் புகாரையும் பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை" எனக் கொதிக்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்த். அவர் நம்மிடம், " புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவிகள் ஒரு சில பேராசிரியர்களால் தொடர்ந்து பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஆராய்ச்சி மாணவி ஒருவர் உடற்கல்வித் துறை பேராசிரியர் பிரவீன் என்பவர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து காலாப்பட்டு காவல்நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதியப்பட்டது. தற்போது பேராசிரியர் பிரவீன், ' என் மீது கொடுத்துள்ள புகாரைத் திரும்ப பெறு, இல்லையென்றால் உன் மீது ஆசிட் அடிப்பேன். உயிரோடு நீ வீட்டுக்குப் போக முடியாது' என மிரட்டுகிறார்.

மேலும் இதே பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி ஒருவர் 2013-ம் ஆண்டு, 'மிரட்டும் தொனியில் நடந்து கொண்டதாக' புகார் அளித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றும் இவர் மீது பல்வேறு வழக்குகள் காலாப்பட்டு காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது. பல்கலைக்கழக மாணவர் பேரவை நிர்வாகியையும் இவர் இதேபோன்று மிரட்டியுள்ளார். இவருக்கு ஆதரவாகச் சில பேராசிரியர்களும் இதுபோன்ற அவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிகள் கொடுத்த பாலியல் சீண்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவின் தலைவர் இதுவரையில் ஒரு புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
அந்தக் குழுவினர் மாணவிகள் கூறும் புகார்களை முறையாக கையாளத் தவறியதால்தான் இதுபோன்ற குற்றங்களை செய்யும் பேராசிரியர்கள் பணியில் தொடர்கிறார்கள். மாணவிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக பதிவாளர் உடனடியாக பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவை மறுசீரமைப்பு செய்து, கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள மாணவிகள் புகார்கள் மீது அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பாலியல் சீண்டல் புகாரில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வழங்க வேண்டிய நாற்பதாயிரம் ரூபாய் அபராதத்தையும் சான்றிதழ்களையும் உடனே வழங்க வேண்டும்" என்றார் கொந்தளிப்போடு.இதுகுறித்து உடற்கல்வித் துறை பேராசிரியர் பிரவீனைத் தொடர்பு கொண்டோம். ' ஸாரி...ராங் நம்பர்' என்றார். இதையடுத்து, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம். மாணவிகள் தரப்பில் இருந்து துணைவேந்தரின் கவனத்துக்கு புகார் கடிதம் வந்துள்ளது. இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். காவல்நிலையத்திலும் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. " என்றார்.
மாணவிகளின் புகார் குறித்த நமது கேள்விகளுக்கு பல்கலைக்கழக தரப்பினர் அளிக்கும் விளக்கத்தை வெளியிட நாம் தயாராக இருக்கிறோம்.

No comments:
Post a Comment