Monetize Your Website or Blog

Monday, 1 August 2016

திண்டுக்கல்லில் அஸ்வின், கோவையில் முரளி விஜய்..! ஏலம் போன கிரிக்கெட் வீரர்கள்

மிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் இன்று நடைபெற்றது. அஸ்வினை திண்டுக்கல் அணியும், முரளி விஜயை கோவை அணியும், தினேஷ் கார்த்திக்கை தூத்துக்குடி அணியும் ஏலம் எடுத்துள்ளன.



முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, காரைக்குடி, கோவை ஆகிய 8 அணிகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது அணிக்கான வீரர்களை தேர்வு செய்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின் ஆகியோரை திண்டுக்கல் அணி ஏலம் எடுத்தது. தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், அபினவ் முகுந்த், ஆஷிக் சீனிவாஸ் ஆகியோரை தூத்துக்குடி அணி ஏலம் எடுத்தது.

இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், சையது முகமது, எம்.முகமது ஆகியோரை கோவை அணியும், ஆண்டனி தாஸ், ஆர்.சதீஷ், கோபிநாத், யோமகேஷ், சற்குணம் ஆகியோரை சென்னை அணியும், பத்ரிநாத், அனிருதா, சுனில்சாமி , சுரேஷ்பாபு ஆகியோரை  காரைக்குடி அணியும், அபரஜித், அபிஷேக் தனவர், ராகில்ஷா கவின் ஆகியோரை திருவள்ளூர் அணியும், இந்திரஜித், கவுசி, ஜேசுராஜ், ஷாருகான் ஆகியோரை காஞ்சிபுரம் அணியும், அருண் கார்த்திக், சுரேஷ்குமார், தியாகராஜன் ஆகியோரை மதுரை அணியும் ஏலம் எடுத்துள்ளது. 

இந்த போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்களில் இருந்து, 888 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து வீரர்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். ஒரு அணிக்கு 17 முதல் 19 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வீரர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்திய சீனியர் அணிக்காக விளையாடிய வீரர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் எனவும், இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு ரூ.2½ லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1½ லட்சம் எனவும், மற்ற வீரர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.



தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. ரூ.3½ கோடி பரிசுத்தொகைக்கான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம், நத்தம், திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் நடைபெற உள்ளன.


No comments:

Post a Comment