தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் குற்றம் இழைப்போர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் வலியுறுத்தி உள்ளார்.

தலித்துகள் மீது சமீபகாலமாக நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தை மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.கே.பிஜு நேற்றி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், “தினந்தோறும் மூன்று தலித் பெண்கள் வீதம் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். தலித்துகளுக்கு எதிராக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் அந்த சமூகத்தைச் சேர்ந்த 37.8 சதவீத மாணவர்கள் தனியாக அமர வைக்கப்படுகின்றனர். தலித்துகளில் 24.5 சதவீதம் பேர் புகார் அளிப்பதற்காக காவல் நிலையங்களுக்குள் நுழையவே அனுமதிக்கப்படுவதில்லை.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில அமைப்புகள் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களிலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுவது பற்றி பிரதமர் மோடி அண்மையில் கருத்து தெரிவித்தார். வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் இந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவற்றைத் தடை செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்து பேசும்போது, ''தலித்துகள் மீதான தாக்குதல் விவகாரத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது. இந்த அநீதிக்கு முடிவுகட்ட இதை ஒரு சவாலாக நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தலித் மக்கள் மீதான வன்முறை சம்பவங்களில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு ஜாதிகளையும், சமூகங்களையும் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
'உலகமே ஒரு குடும்பம்' என்பதில் நமது முன்னோர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில சமூக விரோத சக்திகள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றன. குற்றம் இழைப்போருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொள்கிறேன். தலித்துகளின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக நாம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம்.
தலித்துகள் மீதான தாக்குதல் விவகாரத்தில், கட்சிகள் ஒன்றையொன்று வசைபாடிக் கொண்டிருப்பது தீர்வாகாது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கப்படாதவரை நம்மால் முன்னேற்றம் காண இயலாது. குஜராத் மாநிலம், உனா நகரில் நடைபெற்ற தாக்குதலானது வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றார்.

No comments:
Post a Comment