அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனை செய்வதும், ஷாருக்கான் அதில் சிக்குவதும் வழக்கமான விஷயமாகிவிட்டது. இந்த முறை லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் ஷாருக்கானை அமெரிக்க அதிகாரிகள் காக்க வைத்துள்ளனர். ஆனால் அங்கு ஷாருக் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் காக்க வைத்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில் '' நான் பாதுகாப்பு அதிகாரிகளை முழுமையாக புரிந்து கொள்கிறேன், மதிக்கிறேன். ஆனால் அமெரிக்க இமிக்ரேஷனில் காத்திருப்பது உண்மையாலுமே கிரிகித்து கொள்ள முடியாத ஒன்று'' என்று ட்விட் செய்துள்ளார்.
சிறுது நேரத்துக்கு பிறகு ''காத்திருந்த நேரத்தில் சில போக்கிமேன் பிகாசூக்களை பிடித்ததாகவும் ட்விட் செய்துள்ளார்.
ஷாருக்கான் இதேபோல் 2009 மற்றும் 2012ம் ஆண்டு அமெரிக்க அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதும், தனது ''மை நேம் இஸ் கான்'' படத்தில் இதனை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment