ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களது ஜெர்சியின் பின்பக்கத்தில் 'இந்தியா ' என பெயர் பொறிக்கப்படாதது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஒலிம்பிக் போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் 64 கிலோ எடைப் பிரிவில், லிதுவேனியா வீரர் எவால்டஸ் பெட்ராஸ்காசை வீழ்த்தினார். இந்நிலையில் மனோஜ்குமாரின் ஜெர்சியின் பின்பக்கத்தில் 'இந்தியா' என பொறிக்கப்படவில்லை. வழக்கமாக ஜெர்சியின் பின்பக்கத்தில், தாய்நாட்டின் பெயர் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. இதையடுத்து சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம், இந்திய குத்துச் சண்டை வீரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'ஒலிம்பிக்கில் இன்று நடைபெறும் போட்டிகளில், இந்தியாவின் பெயர் பொறித்த ஜெர்சி அணியவில்லையென்றால் தகுதி நீக்கம் செய்து விடுவோம்' என எச்சரித்துள்ளது. இதையடுத்து இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு ஜெர்சியின் பின்பக்கத்தில் ' இந்தியா' என பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment