பசுக் காப்பாளர்கள் என்ற பெயரில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் அனைவரும் சமூக விரோதிகள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், பசு மீது கொண்டுள்ள பக்தி வேறு; பாதுகாப்பு வெறி வேறு (Cow Bakth is different from Cow Rakshak) என்றும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தெளிவுபடுத்தினார்.
டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ’மை கவ்’ இணையதளம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் நேற்று உரையாற்றினார். ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், தங்களின் கேள்விகளை பிரதமரிடம் பொதுமக்கள் கேட்டனர். சிறந்த அரசாங்கம் குறித்த பொதுமக்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், வெளிப்படையானதும், நம்பிக்கை மிக்கதாக இருப்பதே சிறந்த அரசாங்கம்.
நல்லாட்சி என்பது மக்களின் குறைகளைக் கேட்பது மட்டுமல்ல; அவற்றுக்குத் தீர்வு காண்பதும்தான். பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதுதான் ஜனநாயகத்தின் உண்மையான அடித்தளம். மத்திய அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி ஆட்சி நிர்வாகத்தில் பொதுமக்களும் பங்களிக்க வேண்டும். சிறந்த நிர்வாகம் இல்லை என்றால், எத்தகைய நலத் திட்டங்களை வகுத்தாலும் அவை மக்களைச் சென்றடையாது. அதனால் கோடிக்கணக்கான மக்களின் வரிப் பணம்தான் விரயமாகும்" என்றார்.

மேலும் அவர் உரையாற்றும்போது, ''காதி துணிகளை மக்கள் விரும்பி அணிய வேண்டும். அப்போதுதான், நாட்டின் ஜவுளித் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். ஒவ்வொரு ஜனநாயகத்திலும் மக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கைகள் அவசியமானது. இதன் மூலம்தான் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். இந்தியாவில் 300 கிராமங்களை தேர்ந்தெடுத்து அவற்றை அந்தந்த பகுதிகளின் வளர்ச்சி மையங்களாக மேம்படுத்த உள்ளோம். நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கிராமங்கள் இருக்கும்" என்றார்.
பசுப் பாதுகாவல் என்ற பெயரில் அமைப்புகள் தொடங்கி பலர் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்னை மிகவும் கோபமூட்டுகிறது.
பசுக் காப்பாளர்கள் என்ற முகத்திரையுடன் வலம் வரும் நபர்களின் கடந்த கால செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தயாரிக்க வேண்டும். அவர்களில் 80 சதவீதம் பேர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களாகத்தான் இருப்பர். பகலில் பசுக் காப்பாளர்களாகவும், இரவில் சமூக விரோதிகளாகவும் அவர்கள் உள்ளனர்.
தங்களின் தவறுகளை மறைப்பதற்காக அவர்கள் பசு மீது அபிமானம் உள்ளவர்கள் போல காட்டிக் கொள்கின்றனர். பசு மீது கொண்டுள்ள பக்தி வேறு; பாதுகாப்பு வெறி வேறு (Cow Bakth is different from Cow Rakshak). பிராணிகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றை நான் நடத்தியபோது, ஒரு பசு மாட்டின் வயிற்றில் இருந்து 2 வாளி பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டன. வெட்டிக் கொல்லப்படும் பசுக்களைக் காட்டிலும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறக்கும் பசுக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.

உண்மையான பசுப் பாதுகாவலர்கள் பிளாஸ்டிக் ஆபத்துகளில் இருந்து அவற்றை மீட்க வேண்டும். மாறாக, மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சமூக சேவை அல்ல. தன்னலமற்ற, தியாக மனப்பான்மை சார்ந்த செயல்பாடுகளைத்தான் சமூகப் பங்களிப்பாகக் கருத முடியும். டவுன் ஹால் மீட்டிங் என்ற பெயரில் தேசத்தலைவர்கள் பொது மக்களை சந்திக்கும் நிகழ்வு அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது மிகவும் பிரபலமான வழக்கம். தற்போது அதே பாணியிலான ஒரு நிகழ்வு இந்தியாவிலும் முதன்முறையாக அரங்கேறியுள்ளது" என்றார்.

No comments:
Post a Comment