Monetize Your Website or Blog

Monday, 1 August 2016

பஸ்சில் பயணித்த உம்மன்சாண்டி... பார்த்து வியந்த பயணிகள்!

கொல்லம் பேருந்து நிலையம். நேற்று முன்தினம் இரவு 7.30 மணி. கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஒன்று திருவனந்தபுரத்துக்கு புறப்படத் தயாராக நிற்கிறது. அப்போது வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் பேருந்தில் ஏறுகிறார்.
பஸ் அருகே நின்றிருந்த லேடி கண்டக்டருக்கு அவரை எங்கேயோ பார்த்த நினைவு. கூர்ந்து கவனித்தால், அது உம்மன் சாண்டி. மாநிலத்தின் முன்னாள் முதல்வர். சேட்டா என அலறுகிறார் கண்டக்டர். அவருக்கு   கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன நடக்குதுனு ஒன்னும் புரியவும் இல்லை.கண்டக்டருக்கு நமஸ்காரம் போட்டு விட்டு,  பேருந்தில் ஏறி, ஓட்டுநர் இருக்கைக்கு பின்னே உள்ள சீட்டில் அமர்ந்து கொள்கிறார் சாண்டி.செக்யூரிட்டியிடம் கண்டக்டர் 2 டிக்கெட்டுகளை கொடுக்க, உம்மன் சாண்டி 'என்னிடம் பாஸ்இருக்கிறது' என ஒன்றை திருப்பிக் கொடுத்தார்.


பேருந்தில் இருந்த மற்ற பயணிகளுக்கோ உம்மன் சாண்டியை கண்ட இன்ப அதிர்ச்சி.  மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நம்முடன் பேருந்தில் வருகிறாரா என ஆச்சரியத்தில் வாயை பிளக்கின்றனர். கை கொடுக்கின்றனர். அரசியல் விவகாரம் பேசுகின்றனர். அடுத்த முறை ஆட்சியை பிடிப்பீர்களா என கேட்கின்றனர். வீட்டில் எல்லாம் சவுக்கியமா என குசலம் விசாரிக்கின்றர் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். பயணிகளின் எல்லா கேள்விகளுக்கும் உம்மனும் சளைக்காமல் பதிலளிக்கிறார்.
கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 2 மணி நேர பயணம். சாண்டியின்  பஸ் பயணம் செய்தியாளர்களுக்கு தெரியவர, அவர்கள் காரிலும், பைக்கிலும் சாண்டியின் பஸ்சை துரத்தினர். ஆங்காங்கே பஸ்சை நிறுத்தி செய்தியாளர்களும் கேமராமேன்களும்  தொற்றிக் கொள்ள 10 ஆண்டுகளுக்கு பிறகு  உம்மன் சாண்டியின் பஸ் பயண ஆசை  குதூகலமாக நிறைவேறியது.
திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலும் தகவல் அறிந்து ஏராளமான மீடியாக்காரர்கள் குவிந்து விட்டனர். பேருந்தில் இருந்து இறங்கிய உம்மன் சாண்டி, '' பஸ்சில் பயணித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. திருவனந்தபுரத்துக்கு ரயிலை மிஸ் செய்து விட்டதால் பஸ்சில் வந்தேன். முதல்வராக இருந்த வரையில் பஸ் பயணம் சாத்தியப்படவில்லை. அதற்கு நேரமும் இல்லை. இப்போது நேரம் கிடைத்துள்ளது. அதனால் பஸ்சில் போகலாம் என முடிவெடுத்தேன். இனியும் தொடர்ந்து பஸ்சில் பயணிப்பேன் ''என்றார். 

திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் உம்மன் சாண்டியை அழைத்து செல்ல கார் வந்திருந்தது. அதில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். அண்மையில் நடந்த சட்டசபைத் தேர்தலில் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி  வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.  முதல்வராக இருந்த உம்மன் சாண்டி பதவி விலகினார்.




No comments:

Post a Comment