‘காணாமல் போன தன் கணவரைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இதுவரை 600க்கும் மேற்பட்ட மனுக்கள் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டோடு தான் அனுப்பிய மனுக்களின் ரசீதுகளுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு பவித்ரா என்ற பெண்மணி சமீபத்தில் வந்திருந்தது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பினை உண்டாக்கியது.
இவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ‘’இந்த வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் வடக்கு இன்ஸ்பெக்டர், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆகியோர் உடனே பதில் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வு வேண்டி அதிகாரிகளுக்கு அனுப்பும் மனுக்கள் மீது அவர்கள் எவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதற்கு பவித்ரா சாட்சியாக உள்ளார். பவித்ராவின் கணவர் யார்? ஏன்,எப்படி காணாமல் போனார்? என்பதை பவித்ராவிடம் விசாரித்தோம்.
‘’ எனக்கு பூர்வீகம் திண்டுக்கல், வயதான அம்மாவுடன் வசித்து வருகிறேன். ஆறு வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும் மோகன்ராம் என்பவரைக் காதலித்து மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அதற்குப் பின்புதான் அவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பது எனக்கு தெரிய வந்தது. சேர்க்கை சரியில்லாமலும், அவருடைய பெற்றோரின் பேராசையாலும் இப்படி தப்பான நபர்களுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபாட்டார் என்பதை அவர் என்னிடம் சொன்னார். இனி இதுபோன்ற தப்பான வழியில் போகவேண்டாம், இனி இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று காவல்துறை அதிகாரிகளிடம் எழுதிக்கொடுத்துவிட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று அவரிடம் கூறி நல்லவராக மாற்றினேன். அவரும் என் மேல் உயிராக இருந்தார். ஒத்துக்கொண்டார்.
அவரை நான் திருத்த முயற்சிப்பது அவருடைய பெற்றோருக்கும், அவரை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த சில கட்டப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் ,வக்கீல்களுக்கும், போலீசுக்கும் பிடிக்கவில்லை. ‘’ஒரு ரவுடிப்பயலை யாரைக்கேட்டு கல்யாணம் செஞ்சே உடனே அவனை விட்டு ஓடிடு, இல்லை உன்னை தொலைச்சுப்புடுவோம்’’ என்று எல்லோரும் மிரட்ட ஆரம்பித்தார்கள்.
எனக்கு அவர் மேல் நம்பிக்கை இருந்ததால், எல்லா மிரட்டலையும் தாங்கிக் கொண்டு இருந்தேன், என் மகிழ்ச்சி ஒருவாரம் கூட நிலைக்கவில்லை. கல்யாணமாகி ஒருவாரத்தில் அவர் காணாமல் போய்விட்டார். ஆனால், அவர் குடும்பத்தினரோ, அவரை வைத்துப் பிழைத்தவர்களோ அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருந்தார்கள். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அப்போதிருந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன், என் கணவரைக் கண்டுபிடித்துத் தரும்படி பெரிய அதிகாரிகளுக்குத் தொடர்ந்து மனுக்கள் அனுப்பிக்கொண்டிருந்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.
இதற்கிடையே என் மாமனார் குடும்பத்தினார் என்னை டார்ச்சர் செய்து கொண்டிருந்தனர். இப்படியே காலம் ஓடிக்கொண்டிருந்தபோது, 2014 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக போலீஸார் தகவல் சொன்னார்கள். அங்கு சென்று பார்த்தபோது பேசும் நிலையில் அவர் இல்லை. கண்கள் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த வழக்கில் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பதாகச் சொன்னார்கள். திருச்சி சிறையில் இருந்த அவரை என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு 12.6.2015 அன்று வெளியில் வந்து விட்டதாக திண்டுக்கல் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். ஆனால், அவர் இங்கு வரவில்லை, எங்கு சென்றார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது யாரும் கடத்தி வைத்திருக்கிறார்களா, அல்லது கொலை செய்து விட்டார்களா என்று தெரியவில்லை.
இவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ‘’இந்த வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் வடக்கு இன்ஸ்பெக்டர், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆகியோர் உடனே பதில் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வு வேண்டி அதிகாரிகளுக்கு அனுப்பும் மனுக்கள் மீது அவர்கள் எவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதற்கு பவித்ரா சாட்சியாக உள்ளார். பவித்ராவின் கணவர் யார்? ஏன்,எப்படி காணாமல் போனார்? என்பதை பவித்ராவிடம் விசாரித்தோம்.
‘’ எனக்கு பூர்வீகம் திண்டுக்கல், வயதான அம்மாவுடன் வசித்து வருகிறேன். ஆறு வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும் மோகன்ராம் என்பவரைக் காதலித்து மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அதற்குப் பின்புதான் அவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பது எனக்கு தெரிய வந்தது. சேர்க்கை சரியில்லாமலும், அவருடைய பெற்றோரின் பேராசையாலும் இப்படி தப்பான நபர்களுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபாட்டார் என்பதை அவர் என்னிடம் சொன்னார். இனி இதுபோன்ற தப்பான வழியில் போகவேண்டாம், இனி இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று காவல்துறை அதிகாரிகளிடம் எழுதிக்கொடுத்துவிட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று அவரிடம் கூறி நல்லவராக மாற்றினேன். அவரும் என் மேல் உயிராக இருந்தார். ஒத்துக்கொண்டார்.
அவரை நான் திருத்த முயற்சிப்பது அவருடைய பெற்றோருக்கும், அவரை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த சில கட்டப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் ,வக்கீல்களுக்கும், போலீசுக்கும் பிடிக்கவில்லை. ‘’ஒரு ரவுடிப்பயலை யாரைக்கேட்டு கல்யாணம் செஞ்சே உடனே அவனை விட்டு ஓடிடு, இல்லை உன்னை தொலைச்சுப்புடுவோம்’’ என்று எல்லோரும் மிரட்ட ஆரம்பித்தார்கள்.
எனக்கு அவர் மேல் நம்பிக்கை இருந்ததால், எல்லா மிரட்டலையும் தாங்கிக் கொண்டு இருந்தேன், என் மகிழ்ச்சி ஒருவாரம் கூட நிலைக்கவில்லை. கல்யாணமாகி ஒருவாரத்தில் அவர் காணாமல் போய்விட்டார். ஆனால், அவர் குடும்பத்தினரோ, அவரை வைத்துப் பிழைத்தவர்களோ அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருந்தார்கள். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அப்போதிருந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன், என் கணவரைக் கண்டுபிடித்துத் தரும்படி பெரிய அதிகாரிகளுக்குத் தொடர்ந்து மனுக்கள் அனுப்பிக்கொண்டிருந்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.
இதற்கிடையே என் மாமனார் குடும்பத்தினார் என்னை டார்ச்சர் செய்து கொண்டிருந்தனர். இப்படியே காலம் ஓடிக்கொண்டிருந்தபோது, 2014 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக போலீஸார் தகவல் சொன்னார்கள். அங்கு சென்று பார்த்தபோது பேசும் நிலையில் அவர் இல்லை. கண்கள் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த வழக்கில் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பதாகச் சொன்னார்கள். திருச்சி சிறையில் இருந்த அவரை என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு 12.6.2015 அன்று வெளியில் வந்து விட்டதாக திண்டுக்கல் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். ஆனால், அவர் இங்கு வரவில்லை, எங்கு சென்றார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது யாரும் கடத்தி வைத்திருக்கிறார்களா, அல்லது கொலை செய்து விட்டார்களா என்று தெரியவில்லை.இது சம்பந்தமாக பல மனுக்கள் அனுப்பியும் காவல்துறையினர் அலட்சியமாக இருக்கிறார்கள். என் கணவர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருக்கலாம். அந்த வழக்குகளையும் சட்டபூர்வமாகச் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதே நேரம் என் கணவர் என்ற முறையில் அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை எனக்குத் தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா? ஒருநாள் கூட நிம்மதியாக தூங்கமுடியவில்லை.
அவரை திருமணம் செய்து ஒருவாரம்தான் அவருடன் வாழ்ந்தேன். ரவுடி என்பவன் கடைசி வரை ரவுடியாகவே இருந்து சாக வேண்டுமா? திருந்த வாய்ப்பளிக்க மாட்டார்களா? தற்போது எனக்குத் தெரிய வேண்டியது அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுதான். நீதி மன்றத்தைத்தான் நம்பியிருக்கிறேன்’’ என்றார் அழுதபடி.
இந்த வழக்கை பவித்ராவுக்காக இலவச சட்ட உதவி மையத்தின் வழக்கறிஞர் வைரம் சந்தோஷ் நடத்துகிறார். அவரிடம் பேசினோம் ‘’இத்தனை மனுக்கள் அனுப்பியும் அதிகாரிகள் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. என் கட்சிக்காரரின் கணவர் குற்ற பின்னணி உள்ளவராகவே இருக்கட்டும், காவல்துறை அதற்கு முறையாக வழக்கு நடத்தி தண்டனை வாங்கி கொடுக்கட்டும், அதற்காக அவர் காணாமல் போனது பற்றி அவர் மனைவி கொடுத்த புகாரை விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது சட்டப்படி சரியல்ல. அடுத்து திண்டுக்கல் எஸ்.பி. தாக்கல் செய்யும் பதில் மனுவின் மூலம் உண்மை தெரியும் ‘’ என்றார்.

No comments:
Post a Comment