'பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பது நியாயம்தானா' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்த புயல் வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. ' மோடி பேசிய அளவுக்குக்கூட மன்மோகன் சிங் பேசியதில்லை' என்கிறார் வி.சி.கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு ஒன்று, அக்கட்சிக்குள் பெருத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவருடைய பதிவில், ' நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் சராசரி அரசியல்வாதிகள் அல்ல. பதவிக்காக பா.ஜ.க.வில் இணைந்து முன்னேறியவர்களும் அல்ல. இந்துத்துவத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவாகி அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் சிரித்தாலும் அழுதாலும்
சிந்தித்தாலும் எழுதினாலும் பேசினாலும் செயல்பட்டாலும் அனைத்திலுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் வேர் இருக்கும். அந்தவகையில் திருவள்ளுவரை வைத்து தருண் விஜய் நடத்திய நாடகத்தை தமிழகம் அடையாளம் கண்டு கொண்டது. ஆனால், பொதுச்செயலாளரின்(ரவிக்குமார்) முயற்சியால் நம் கட்சி தருண் விஜய்யை ஆதரித்தது.
பா.ஜ.க அரசு புரட்சியாளர் அம்பேத்கரை புகழ்வதும் அவருக்கு விழா எடுப்பதும் சிலை வடிப்பதும் நினைவகம் எழுப்புவதும் அப்பட்டமான அரசியல் நடவடிக்கைதான். ஆனால், நம் கட்சியின் பொதுச்செயலாளர் மோடியைப் பாராட்டி வெளிப்படையாக எழுதுகிறார்.
"தலித்களைத் தாக்காதீர்கள் என்னைத் தாக்குங்கள்" என பேசினார் பிரதமர். மோடியின் இந்தப் பேச்சு அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், என்னைத் தாக்குங்கள் என ஒரு பிரதமரே சொல்வது அபத்தம். ஆனால், இந்த அபத்தப் பேச்சுக்காக மோடியைப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார் நம் பொதுச்செயலாளர். 'பிரதமரே பேசிவிட்டதால் இனி தலித்கள் மீதான தாக்குதல் குறையும்' என்று அதற்கு ஒரு காரணத்தையும் சொல்லியுள்ளார். ஒரே நேரத்தில் ஒரே விஷயத்தில் மோடியை எதிர்த்து கட்சியும் மோடிக்கு நன்றி சொல்லி பொதுச்செயலாளரும் கருத்து சொன்னால் அது குழப்பத்தையே ஏற்படுத்தும்' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஷாநவாஸின் அதிரடியை திருமாவளவன் எதிர்பார்க்கவில்லை. ' வி.சி.கவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பும் சிலர் ஷாநவாஸைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்' என சிலர் பேசி வந்தாலும், இதுகுறித்துப் பேசிய திருமாவளவன், ' மோடியின் பேச்சை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கிறோம். 'என்னைத் தாக்குங்கள்' என்று சொல்வதன் மூலம், தலித்துகள் மீதான தாக்குதலை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதை ஆதரித்து ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இப்படி ஆதரிப்பது சரியா என எங்கள் கட்சியில் ஒரு பிரிவினர் கருத்து சொல்லியிருக்கின்றனர். எங்கள் கட்சியின் ஜனநாயகத்தன்மையை இது காட்டுகிறது' என்றதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஆளூர் ஷாநவாஸிடம் பேசினோம். " இந்த விவகாரம் குறித்து தலைவரிடம் விளக்கம் அளித்துவிட்டேன். என்னுடைய முகநூல் பதிவையும் நீக்கிவிட்டேன்" என்றார். இதையடுத்து, வி.சி.கவின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம். " உத்தரப்பிரதேசத் தேர்தலை முன்வைத்து பிரதமர் மோடி பேசுகிறார் என்று சிலர் தெரிவித்தாலும், அவர் கூறியதில் மிக முக்கியமான தகவல் ஒன்றும் அடங்கியிருக்கிறது. நேற்று குடியரசுத் தலைவரும், சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்துப் பேசியிருக்கிறார். பத்தாண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், எந்த இடத்திலாவது சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் மீதான தாக்குதல்கள் குறித்துப் பேசியிருப்பாரா?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு ஒன்று, அக்கட்சிக்குள் பெருத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவருடைய பதிவில், ' நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் சராசரி அரசியல்வாதிகள் அல்ல. பதவிக்காக பா.ஜ.க.வில் இணைந்து முன்னேறியவர்களும் அல்ல. இந்துத்துவத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவாகி அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் சிரித்தாலும் அழுதாலும்
சிந்தித்தாலும் எழுதினாலும் பேசினாலும் செயல்பட்டாலும் அனைத்திலுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் வேர் இருக்கும். அந்தவகையில் திருவள்ளுவரை வைத்து தருண் விஜய் நடத்திய நாடகத்தை தமிழகம் அடையாளம் கண்டு கொண்டது. ஆனால், பொதுச்செயலாளரின்(ரவிக்குமார்) முயற்சியால் நம் கட்சி தருண் விஜய்யை ஆதரித்தது.பா.ஜ.க அரசு புரட்சியாளர் அம்பேத்கரை புகழ்வதும் அவருக்கு விழா எடுப்பதும் சிலை வடிப்பதும் நினைவகம் எழுப்புவதும் அப்பட்டமான அரசியல் நடவடிக்கைதான். ஆனால், நம் கட்சியின் பொதுச்செயலாளர் மோடியைப் பாராட்டி வெளிப்படையாக எழுதுகிறார்.
"தலித்களைத் தாக்காதீர்கள் என்னைத் தாக்குங்கள்" என பேசினார் பிரதமர். மோடியின் இந்தப் பேச்சு அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், என்னைத் தாக்குங்கள் என ஒரு பிரதமரே சொல்வது அபத்தம். ஆனால், இந்த அபத்தப் பேச்சுக்காக மோடியைப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார் நம் பொதுச்செயலாளர். 'பிரதமரே பேசிவிட்டதால் இனி தலித்கள் மீதான தாக்குதல் குறையும்' என்று அதற்கு ஒரு காரணத்தையும் சொல்லியுள்ளார். ஒரே நேரத்தில் ஒரே விஷயத்தில் மோடியை எதிர்த்து கட்சியும் மோடிக்கு நன்றி சொல்லி பொதுச்செயலாளரும் கருத்து சொன்னால் அது குழப்பத்தையே ஏற்படுத்தும்' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஷாநவாஸின் அதிரடியை திருமாவளவன் எதிர்பார்க்கவில்லை. ' வி.சி.கவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பும் சிலர் ஷாநவாஸைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்' என சிலர் பேசி வந்தாலும், இதுகுறித்துப் பேசிய திருமாவளவன், ' மோடியின் பேச்சை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கிறோம். 'என்னைத் தாக்குங்கள்' என்று சொல்வதன் மூலம், தலித்துகள் மீதான தாக்குதலை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதை ஆதரித்து ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இப்படி ஆதரிப்பது சரியா என எங்கள் கட்சியில் ஒரு பிரிவினர் கருத்து சொல்லியிருக்கின்றனர். எங்கள் கட்சியின் ஜனநாயகத்தன்மையை இது காட்டுகிறது' என்றதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஆளூர் ஷாநவாஸிடம் பேசினோம். " இந்த விவகாரம் குறித்து தலைவரிடம் விளக்கம் அளித்துவிட்டேன். என்னுடைய முகநூல் பதிவையும் நீக்கிவிட்டேன்" என்றார். இதையடுத்து, வி.சி.கவின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம். " உத்தரப்பிரதேசத் தேர்தலை முன்வைத்து பிரதமர் மோடி பேசுகிறார் என்று சிலர் தெரிவித்தாலும், அவர் கூறியதில் மிக முக்கியமான தகவல் ஒன்றும் அடங்கியிருக்கிறது. நேற்று குடியரசுத் தலைவரும், சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்துப் பேசியிருக்கிறார். பத்தாண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், எந்த இடத்திலாவது சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் மீதான தாக்குதல்கள் குறித்துப் பேசியிருப்பாரா?
இந்த நாட்டில் தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதல்கள் குறித்து பிரதமரும் குடியரசுத் தலைவரும் பேசியிருப்பது வரவேற்கத்தகுந்தது. ஆனால், இவ்வாறு பேசினால் மட்டும் போதாது. தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தலித், சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களை முற்றாக ஒழிப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றமும் வர்மா கமிஷனும் சட்ட ஆணையமும் பரிந்துரைத்துள்ள சாதி ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பிரதமர் தீவிரம் காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களது பேச்சை தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் நம்புவார்கள். என்னுடைய கருத்தில் எந்தவித மாற்றமுமில்லை" என்றார் தெளிவாக.
' மதச்சார்பற்ற அரசியலை முன்வைத்து இயங்கும் வி.சி.கவுக்குள் எழுந்துள்ள மோடி புயல், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதிரடியைக் கிளப்பலாம்' என்கின்றனர் சிறுத்தைகள் கட்சியின் ஒருபிரிவினர்.

No comments:
Post a Comment