Monetize Your Website or Blog

Tuesday, 16 August 2016

பா.ஜ.கவுடன் கூட்டணி சேர, காங்கிரஸை விமர்சிக்க வேண்டாம்!' -சிறுத்தைகள் மீது பாயும் காங்கிரஸ்

'
பிரதமர் மோடி அளவுக்கு மன்மோகன் சிங் பேசியதில்லை' என விகடன்.காம் தளத்திற்கு பேட்டியளித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்


. ' தலித் மக்கள் மீது இப்போது நடக்கும் கொடூர சம்பவங்கள் அப்போது நடந்ததா?' எனக் கொந்தளிக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி.
' தலித்துகளைத் தாக்காதீர்கள். என் மீது தாக்குதல் நடத்துங்கள்' என உருக்கமாக வேண்டுகோள் வைத்தார் பிரதமர் மோடி. இந்தக் கருத்துக்கு வி.சி.கவின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆதரவு தெரிவித்துப் பேசியிருந்தார். இதற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ' மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் நாம் இருக்கும்போது, பொதுச் செயலாளரின் கருத்துக்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன' என தொல்.திருமாவளவனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
வி.சி.கவுக்குள் நடக்கும் குழப்பங்கள் குறித்து நம்மிடம் பேசிய ரவிக்குமார், ' பிரதமரும் குடியரசுத் தலைவரும் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்கள். இத்தோடு மட்டும் நிறுத்திவிடாமல் தலித் மக்கள் மீதான தாக்குதல்களை முற்றாகத் தடுத்து நிறுத்தப் பாடுபட வேண்டும். சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மோடி அளவுக்குக்கூட மன்மோகன் சிங் பேசியதில்லை' எனக் கூறியிருந்தார்.

ரவிக்குமாரின் கருத்து பற்றி ஃபேஸ்புக்கில் விரிவாக பதில் அளித்திருக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, "ரவிக்குமார் விரும்பினால் மோடியைத் துதிபாடலாம். விடுதலைச் சிறுத்தைகளை அழைத்துச் சென்று கூட்டணி சேரலாம். அது அவர்களின் சொந்த விருப்பம். ஆனால் காங்கிரஸை அவதூறு செய்து பா.ஜ.கவைத் திருப்திபடுத்தும் அளவுக்கு கீழே இறங்கினால், அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். பசுவின் பெயரால் முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் எதிரான தாக்குதல்கள், மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அவரின் மௌன அனுமதியோடு அரங்கேறி வருவது நாம் அறியாததல்ல.

 
ரவிக்குமாருக்கும் தெரியாததல்ல. காங்கிரஸின் பத்தாண்டுகால ஆட்சியில் ஒரு தேசத்தை கற்காலத்துக்கு எடுத்துச் செல்லும் எந்தவொரு செயல்பாடும் நடக்கவில்லை.

பா.ஜ.கவை ஆர்.எஸ்.எஸ் இயக்குவது போல, காங்கிரஸ் கட்சிக்கு ஏதேனும் திரைமறைவு அமைப்புகள் இருந்ததா, கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் இம்மாதிரியான கொடூரமான ஒடுக்குமுறையில் ஈடுபட்டார்களா? அப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. நடக்காத சம்பவத்திற்கு மன்மோகன் சிங் எதற்கு வாய் திறக்க வேண்டும்? ஒடுக்கப்பட சமூகத்தின் பக்கம் உறுதியாக நின்று இம்மாதிரியான சம்பவங்கள் எதுவும் நடக்காமல் பாதுகாத்த அரசு மன்மோகன் சிங் அரசு . ஆனால் நடக்காத சம்பவத்தை மன்மோகன் சிங் கண்டிக்கவில்லை என்று இப்போது நீங்கள் புதிதாக கண்டுபிடித்திருக்கிறீர்கள்.

இதை மனசாட்சியுள்ள எந்த வி.சி.க தோழரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். நீங்கள் பா.ஜ.கவுக்கு சாமரம் வீசவேண்டுமென்றால் சொந்த விருப்பத்தின் பேரில் வெளிப்படையாக வீசுங்கள். அந்த நேர்மையையாவது உங்களிட.மிருந்து எதிர்பார்ப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். காங்கிரசை அவதூறு செய்வதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். ரவிக்குமாரின் இந்த கருத்தை வி.சி.க ஏற்கிறதா எனபதை திருமாவளவன் தெளிவுபடுத்த வேண்டும்" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார் ஜோதிமணி.



No comments:

Post a Comment