Monetize Your Website or Blog

Wednesday, 1 June 2016

விஜயகாந்த் பட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.2 கோடி அபராதம்!

காசோலை முறைகேடு வழக்கில் விஜயகாந்த் படத் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2.40 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.



விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள், செந்தூரப்பூவே, ராம்கி நடித்த இணைந்த கைகள் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவர் ஆபாவாணன். காசோலை செலுத்தி பணம் பெறுவதில் வங்கி அதிகாரிகளுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆபாவாணன் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி தலைமை மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.


இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. காசோலை முறைகேட்டில் மூன்று பேரும் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது உறுதிப்படுத்திய நீதிமன்றம், ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2.40 கோடி அபராதமும் விதித்தது.

மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி தலைமை மேலாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 15 லட்ச ரூபாய் அபராதமும், உதவி மேலாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





No comments:

Post a Comment