Monetize Your Website or Blog

Wednesday, 1 June 2016

ஜெயலலிதாவுக்கு பேனர் வைத்த போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!



சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டி ஃபிளக்ஸ் பேனர் வைத்த சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையை சேர்ந்த ரவி, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர், ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து தனது ஊரில் உள்ள கடை வீதியில் பெரிய ஃபிளக்ஸ் போர்டு வைத்துள்ளார்.



அதில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே, மீண்டும் தங்களின் பொற்கால ஆட்சியில் பணிபுரிவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. வலது புறம் பெரிய சைஸில் ஜெயலலிதா படமும் இடது ஓரத்தில் ரவியின் படமும் இடம் பெற்றிருந்தது. இந்த ஃபிளக்ஸ் போர்டு பெரும் சலசலப்பை ஏற்டுத்திய நிலையில், வாட்ஸ் அப்பிலும் வேகமாகப் பரவியது.

இதையடுத்து, அந்த ஃபிளக்ஸ் போர்டை காவல்துறையினர் அகற்றியதோடு, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரவி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து திருவாரூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.





No comments:

Post a Comment