Monetize Your Website or Blog

Friday, 13 May 2016

'அட... மதுரையைச் சுத்தி 10 தொகுதில தி.மு.க. தோக்குதுங்க..!' - ஆவேச அழகிரி

 

மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க தோல்வி அடையும் என மு.க. அழகிரி கூறியுள்ளார்.


தி.மு.க.வின் முன்னாள் தென் மண்டல பொறுப்பாளர் மு.க.அழகிரி. இவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வந்தார்.

இந்நிலையில்,  தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது, அழகிரி மீண்டும் தி.மு.க.வில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால்  அழகிரியோ, இது மகனுக்கும், தந்தைக்குமான சந்திப்பு என ஒரே வரியில் பதிலளித்ததை தொடர்ந்து, அந்த பரபரப்பு அத்துடன் அடங்கிப்போனது. 

இந்நிலையில், மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் தி.மு.க. தோல்வி அடையும் என அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்று அவர் அளித்த பேட்டியில், ''ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நான் பேசி குறைந்தது 3 வருடங்களாவது இருக்கும். அவர்களிடம் பேசுவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை.

என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தி.மு.க.வுக்கு தெரியவில்லை. எனவே, அக்கட்சி குறித்து கருத்து ஏதேனும் சொல்ல விரும்பவில்லை. இதுபோன்ற அரசியலில் ஆர்வம் காட்டவும் நான் விரும்பவில்லை.

ஆனால், மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறப்போவதில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். அதே நேரத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில், நான் எந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை'' என்றார்


No comments:

Post a Comment